அதிசய நடமிடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Athisaya Nadamidum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

—BGM—

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

—BGM—

ஆண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
இவளென்ன எனக்கென பிறந்தவளோ…

பெண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

—BGM—

ஆண் : நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட தஞ்சை கோபுரம் நீ…
நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்தப் பாத்திரம்…

பெண் : வண்டு வந்து தங்கத்தானே வண்ணத்தாமரை…
ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும் உள்ள நாள் வரை…

ஆண் : அந்தி வெய்யில் சாயும்போது…
அன்பு வெள்ளம் பாயும்போது…
சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ…

பெண் : தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச…
விட்டு விட்டு நானும் கொஞ்ச…
கட்டில் ஒன்று போட மணநாள் இல்லையோ…

ஆண் : திருமணம் புரிவது என்று…
துடிக்கிது இளமனம் இன்று…
அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ…

பெண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

பெண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
இவளென்ன உனக்கென பிறந்தவளோ…

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

—BGM—

பெண் : கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பாணமோ…
உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ…

ஆண் : சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ…
நீ சிந்துகின்ற பார்வை என்ன ஸ்வர்க்க வாசலோ…

பெண் : என்றும் உள்ள சொந்தம் என்று…
ஏழு ஜென்ம பந்தம் என்று…
நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது…

ஆண் : அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று…
அட்டைப்போல ஒட்டிக்கொண்டு…
இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது…

பெண் : வளருது வளருது மோகம்…
விளையுது விளையுது தாகம்…
இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ…

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
பெண் : நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

ஆண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…

பெண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
ஆண் : இவளென்ன எனக்கென பிறந்தவளோ…

பெண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
ஆண் : நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…


Notes : Athisaya Nadamidum Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Vaali. அதிசய நடமிடும் பாடல் வரிகள்.


Scroll to Top