ஆலா ஆலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவி & ஜி.வி. பிரகாஷ் குமார்சாம் சி.எஸ்லக்ஷ்மி

Aala Aala Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலா ஆலா வானில் ஏற வா…
வெண்ணிலாவை மூட்டை கட்டி…
மண்ணில் கொண்டு வா வா…

பெண் : ஆலா ஆலா பறந்து செல்ல வா…
வானவில்லை தாண்ட வா…

ஆண் : ஈர காற்றிலே தூரம் செல்ல வா…
நீல நீளம் தாண்ட பாலம் செய்ய வா…
மேக மேடையில் ஜோடி சேர வா…
மின்னல் வெட்டில் ஆட வா…

பெண் : ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
தூரம் இல்லை அந்த வெண்ணிலா…
ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா…

BGM

பெண் : வா சிறு சிறகினில்…
முழு மதியினை ஏந்த…
வா உனதழகினில் எனதழகினை தீண்ட வா…

பெண் : வா உயர் உலகினில் உயிர் உரசியே ஆட…
வா முடிவிலியினை நொடி பொழுதினில் தாண்ட வா…

ஆண் : விண்மீன்கள் தாண்டி…
கோள்கள் யாவும் தாண்டி தாண்டி…
வேர் ஒரு பூமி உண்டாக்கலாம்…
மேகத்தில் மூடி கொண்டு வந்த வெண்ணிலாவை…
தூசி தட்டி சுத்தம் செய்து…
காதல் வானில் ஒட்டி கொள்ளலாம்…

பெண் : ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
தூரம் இல்லை அந்த வெண்ணிலா…
ஆலா ஆலா காதல் கொண்டதாலா…
இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா…

BGM


Notes : Aala Aala Song Lyrics in Tamil. This Song from Lakshmi (2018). Song Lyrics penned by Madhan Karky. ஆலா ஆலா பாடல் வரிகள்.


Scroll to Top