பறவையே எங்கு இருக்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாகற்றது தமிழ்

Paravaiye Engu Irukkirai Song Lyrics in Tamil


ஆண் : பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

ஆண் : பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

ஆண் : அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே…
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே…

ஆண் : பார்க்கும் திசைகள் எல்லாம்…
பாவை முகம் வருதே…
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ…

ஆண் : நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…

ஆண் : பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

BGM

ஆண் : உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீளாதோ தொடு வானம் போலவே…
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்…
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்…

ஆண் : இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா…
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா…

ஆண் : முதல் முறை வாழப் பிடிக்குதே…
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே…

ஆண் : முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…

BGM

ஆண் : ஏழை காதல் மலைகள் தன்னில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்…
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்…

ஆண் : இதோ இதோ இந்த பயணத்திலே…
இது போதும் கண்மணி…
வேறென்ன நானும் கேட்பேன்…
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…

ஆண் : இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா…

ஆண் : முதல் முறை வாழப் பிடிக்குதே…
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே…

ஆண் : முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…


Notes : Paravaiye Engu Irukkirai Song Lyrics in Tamil. This Song from Kattradhu Thamizh (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் வரிகள்.


Scroll to Top