ஆதிலட்சுமி தேவிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownபி. சுசீலாUnknownஅம்மன் பாடல்கள்

Aadhi Lakshmi Deviku Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி…
பஞ்சுத் திரி போட்டு…
பசும் நெய் தனை ஊற்றி…

பெண் : குங்குமத்தில் பொட்டிட்டு…
கோல மஞ்சள் தானும் இட்டு…
பூமாலை சூடி வைத்து…
பூசிப்போம் உன்னை திருமகளே…

BGM

பெண் : திருவிளக்கை ஏற்றி வைத்தோம்…
திருமகளே வருக…
குலம் விளங்க எங்கள் வீட்டில்…
கொலுவிருக்க வருக…

பெண் : அலைமகளே வருக…
ஐஸ்வர்யம் தருக…
அலைமகளே வருக…
ஐஸ்வர்யம் தருக…

BGM

பெண் : திருவிளக்கை ஏற்றி வைத்தோம்…
திருமகளே வருக…
குலம் விளங்க எங்கள் வீட்டில்…
கொலுவிருக்க வருக…

BGM

பெண் : வாசலிலே மாக்கோலம்…
வீட்டினிலே லட்சுமீகரம்…
வாசலிலே மாக்கோலம்…
வீட்டினிலே லட்சுமீகரம்…
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம்…
நெஞ்சினிலே லட்சுமீகரம்…

பெண் : அம்மா நீ ஆதரித்தால்…
அகிலமெல்லாம் இன்ப மயம்…
அஷ்டமா சித்தியுடன்…
லோகமெல்லாம் சேம மயம்…
அஷ்டமா சித்தியுடன்…
லோகமெல்லாம் சேம மயம்…

பெண் : அலைமகளே வருக…
ஐஸ்வர்யம் தருக…
அலைமகளே வருக…
ஐஸ்வர்யம் தருக…

BGM

பெண் : மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்…
மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்…
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்…

பெண் : அம்மா நீ அருள் புரிந்தால்…
அகிலமெல்லாம் அலங்காரம்…
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்…
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்…

பெண் : சங்கு சக்ரதாரி நமஸ்காரம்…
சகல வரம் தருவாய் நமஸ்காரம்…
பத்மபீட தேவி நமஸ்காரம்…
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்…


Notes : Aadhi Lakshmi Deviku Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. ஆதிலட்சுமி தேவிக்கு பாடல் வரிகள்.


Scroll to Top