விலகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சூரியவேலன்ஸ்டீபன் சகரியா & ரக்ஷிதா சுரேஷ்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Vilagathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

ஆண் : மயங்குகிறேன் உன் விழியில்…
நீ போதும் என் வழியில்…
சேர்ந்துவிடு என் உயிரில்…
நீதானே என் விடியல்…

ஆண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடி…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டி…

ஆண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடி…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடி…

—BGM—

ஆண் : ஹ்ம்ம்… என்னை பார்த்து மறையும் நிலவு…
கலையாத நீ என் கனவு…
விழிமூடி தூங்கும் முன்னே வலி சேருதே…

பெண் : எனக்காக எரியும் கதிரே…
என் வாழ்வில் ஒளி தந்தாயே…
நீ இன்றி என் பூமி இருளானதே…

ஆண் : மண் சேரும் மழை கூட…
வான் சேர வேண்டுமே…
ஒரு துளி நாம் சேர…
கடல் வேண்டுமே…

ஆண் : காதல் பொய்யில்லையே…
காலம் நீ இல்லையே…
உன்னை தாங்கும் வரை…
உண்மை இங்கில்லையே…

பெண் : ஒரு குரல் அலைக்குதோ…
அது உன்னை கேட்குதோ…

ஆண் : ஒரு குரல் அலைக்குதோ…
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ…

பெண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடா…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டா…

பெண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடா…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடா…

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்…
வேரில்லா மரமாகி போனேன்…
காற்றில்லா தீயாகி போனேனே…

—BGM—

ஆண் : புரியாத கவிதையில் பிழையா…
தவறுக்கு காதல் விலையா…
பிழை இல்லா மனிதன் என்றால்…
இறைவன் இல்லையா…

பெண் : கரைவந்து சேர அலையா…
தேவதையின் இதயம் சிலையா…
கல்லை கூட காதல் என்று கரைப்பதில்லையா…

பெண் : பிரளயத்தில் நிலம் கூட…
நிலை மாறி போகுமே…
நான் அதில் இருந்தாலும்…
உன்னை சேருவேன்…

ஆண் : கருவுற்ற கணமே நான்…
உன் உயிர் தேடினேன்…
உயிரே பிரியாதே…

பெண் : வா அருகிலே…
தாயை போல் தாங்கவா…

ஆண் : உன் மடியிலே…
மழலை போல் தவிழவா…

பெண் : மயங்கிவிட்டேன் உன் விழியில்…
நான் வருவேன் உன் வழியில்…
கலந்துவிட்டேன் உன் உயிரில்…
நீதானே கடலினை மலையினை…
தாண்டியும் வருவாயா…

ஆண் : விலகாதே அன்பே நீயும்…
நீதான் என் நிஜமுமடி…
உன்னுடைய நிழலாய் இருந்தும்…
தனியாக நிக்குறேன்டி…

ஆண் : தலைக்கோதும் உந்தன் மடியில்…
நான் சாய வேண்டுமடி…
உன்னருகில் வாழ்ந்தால் போதும்…
என் சாபம் தீருமடி…

ஆண் : விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…

ஆண் : விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…
விலகாத விட்டு விலகாத…
என்னை பிரியாதே அன்பே…


Notes : Vilagathey Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Suriavelan. விலகாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading