ஏதோ ஏதோ ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & கோபிகா பூர்ணிமாஏ.ஆர்.ரகுமான்எனக்கு 20 உனக்கு 18

Yedho Yedho Onru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

பெண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

ஆண் : உயிரே இதயம்…
பெண் : உனக்கே உனக்கே…

—BGM—

ஆண் : உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே…
மௌனம் கொல்வது கஷ்டம்…
நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்…

பெண் : சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும்…
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது…
மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது…

ஆண் : சூரியனை போலே என் முன்பு வந்தாய்…
பனி துளி போலே பணிந்துவிட்டேனே…

பெண் : உயிரே இதயம்…
ஆண் : உனக்கே உனக்கே…

ஆண் : கனவாய் இருந்தால்…
பெண் : எதிலே இருப்போம்…
ஆண் : நிஜமாய் இருந்தால்…
பெண் : இன்னும் கேட்போம்…

ஆண் : கனவாய் இருந்தால்…
எதிலே இருப்போம்…
நிஜமாய் இருந்தால்…
இன்னும் கேட்போம்…

பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

ஆண் : காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

—BGM—

ஆண் : உள்ளே போகிற சுவாசம் என்பது…
வெளியில் வருவது நியாயம் நியாயம்…
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்…

பெண் : கண்கள் காண்கிற கனவு என்பது…
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்…
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்…

ஆண் : போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க…
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே…

பெண் : உயிரே இதயம்…
ஆண் : உனக்கே உனக்கே…

ஆண் & பெண் : ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…

—BGM—


Notes : Yedho Yedho Onru Song Lyrics in Tamil. This Song from Enakku 20 Unakku 18 (2003). Song Lyrics penned by Pa. Vijay. ஏதோ ஏதோ ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading