ஏதோ ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாபவதாரிணி & கார்த்திக்இளையராஜாசொல்ல மறந்த கதை

Yedho Onnu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…

பெண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…

ஆண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

—BGM—

ஆண் : என்ன சொல்லுது உந்தன்…
பெண்மை உள்ளத்தில் உள்ள…
சங்கதியா சங்கதியா…

—BGM—

ஆண் : உண்மை உன் கண்கள் சொல்ல…
கண்கள் என் உள்ளம் கொள்ள…
நிம்மதியா நிம்மதியா…

—BGM—

பெண் : நடப்பத சொல்ல நான் யாரு…
நடக்குது உள்ளத் தகராறு…
உள்ளமும் உண்மைய அறியாது…
ஒருவருக்கும் இது தெரியாது…

ஆண் : போயி வரும் வெண்ணிலவே…
நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன்…
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

—BGM—

பெண் : பக்கம் நீ நின்றிருக்க…
தூரம் என் உள்ளம் செல்லும்…
என்னடியோ ஏனடியோ…

—BGM—

பெண் : எங்கோ நீ தூரம் நிற்க…
நெஞ்சில் நீ ஒட்டி நிற்க…
என்னடியோ ஏனடியோ…

ஆண் : தாளம் எங்கே தெரியாமல்…
அடிக்குது அடிக்குது இள மனசு…
ராகம் என்னும் கடலினிலே…
தவிக்குது தவிக்குது அலை அடிச்சு…

பெண் : புது வழியில் மனசு போகையிலே…
புது புதுசா எதையோ பாக்கையிலே…
பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே…

ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…

பெண் : வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
பூங்கிளியே மாங்குயிலே கூறு…
ஆண் : பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…

பெண் : உண்மைய நீ ரகசியமா பேசு…
ஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு…

பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…


Notes : Yedho Onnu Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. ஏதோ ஒன்னு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading