எங்கே என் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைடாக்டர். பர்ன், கிரிஷ் & பிரசாந்தினிவிஜய் எபினேசர்கண்டேன்

Enge En Idhayam Song Lyrics in Tamil


ஆண் : உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா… ஏ ஏஹே ஹே…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

ஆண் : உன்னைக் கண்டேனே…

ஆண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து…
நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா…

ஆண் : என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும்…
திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது…
உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே…

BGM

ஆண் : காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை…
தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை…

பெண் : வாய் அசைத்து பார்க்கிறேன்…
வார்த்தைகளில் உன் மொழி…
உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி…

ஆண் : கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை…
புயலாகி உன்னை நான் அடைவேன்…

ஆண் : நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன்…
ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

குழு : உனைக் கண்டேனே…

பெண் : ஓ… இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

ஆண் : ஹோ… உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே ஆஹா…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

BGM

பெண் : காற்று வரம் வாங்கினேன்…
மூங்கில் வழி நீங்கினேன்…
சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்…

ஆண் : காத்திருந்த நாட்களில் காதல் ஒரு ஆறுதல்…
காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்…

ஆண் : பிழை சேர்ந்த போதிலும்…
குறை என்ற போதிலும்…
உனக்காகதான் அதை செய்தேன்…

பெண் : இனி என்னை பிரியாதே ஒரு நாளும்…
பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

பெண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : உன்னைக் கண்டேனே… கண்டேனே…
என்னைத் தந்தேனே… தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…

ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே… பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக… ஆக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா…


Notes : Enge En Idhayam Song Lyrics in Tamil. This Song from Kandaen (2011). Song Lyrics penned by Thamarai. எங்கே என் இதயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading