| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விவேகா | சிந்துரி விஷால் | தேவி ஸ்ரீ பிரசாத் | ரத்னம் |
Yedhanaale (Female) Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எதனால எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…
எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னே சொல்லாம…
இரவெல்லாம் தூங்காம நொடிகூட நீங்காம…
துணையாக இணையாக உயிராக தாங்குற…
பெண் : எதனால… எதனால…
எதனால் எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…
—BGM—
பெண் : கண்ண இமை காப்பது போல…
என்ன நீ காக்குறியே…
மண்ண மழை நெனப்பது போல…
மனச நெனைக்கிறியே…
பெண் : என்ன நீ ஒரு முறை கூட…
நின்னு முகம் பாக்கலியே…
உன்ன போல் உதவுற ஆளே…
உலகத்தில் பொறக்கலயே…
பெண் : சொல்ல ஒரு வார்த்தையும் தோணல…
என்னையே தேடுறேன் காணல…
முன்ன போல் இப்பவும் நானில்ல…
மொத்தமா மாறுது வானிலை…
புரியாத புதிராக உருமாறி உருகுறேன்…
பெண் : எதனால… எதனால…
எதனால் எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக றிக்கிற…
—BGM—
பெண் : ஊரே உன்ன ஒதுக்குற போதும்…
உன்ன நான் வெறுக்கலையே…
கூட நீ நடந்தா கூட…
எனக்கொண்ணும் உறுத்தலையே…
பெண் : நிழலும் கொஞ்சம் இருட்டுல பிரியும்…
நீதான் என்ன பிரியலையே…
கூட நீ இருந்தா போதும்…
எனக்கொரு பயமில்லையே…
பெண் : இப்படி எதுக்கென்ன காக்குற…
எனக்கென யாரையும் தாக்குற…
உசுரென என்ன நீ பாக்குற…
எனக்கொண்ணு ஆனா வேர்க்குற…
மரியாத கொறையாத அளவோட இருக்குற…
பெண் : எதனால… எதனால…
எதனால் எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…
—BGM—
Notes : Yedhanaale Song Lyrics in Tamil. This Song from Rathnam (2024). Song Lyrics penned by Viveka. எதனால பாடல் வரிகள்.
