வா என் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Vaa En Uyire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எனை கொள்ளாமல் கொள்ளாதே தாங்காது நெஞ்சம்…
என் உயிரெல்லாம் உன் வாசம்தான் மெல்ல வீசும்…

பெண் : அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும்…
அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்…

ஆண் : உன் இதழோடு சேர்த்து…
எனை முழுதாக கோர்த்து…
பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே…

பெண் : உன் விழி ரெண்டும் கூச…
புது வெட்க்கங்கள் பேச…
எனை பிரியாமல் அணைதாளே உயிர் நீளுமே…

ஆண் : வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் ஜீவன் வாழுதே…

பெண் : வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் காதல் வாழுதே…

—BGM—

பெண் : உன்னோடு தான் என் மனம் வாழுதே…
அது சொல்லாமலே உன் வசமானதே…

ஆண் : உன்னோடுதான் என் நிழல் போகுதே…
என் கண்ணோடுதான் உன் இமை மூடுதே…

ஆண் : தாலாட்டும் பார்வை நீ வீச வா…
உன் மாரோடு நான் சாய்ந்து தூங்கவா…

பெண் : நான் கேட்கும் பாடல் நீ ஆக வா…
என் உயிரெல்லாம் இசையாக சேர வா…

ஆண் : பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுவேன்…
உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்…

பெண் : உன் கைரேகை மேல் எந்தன் உயில் தீட்டுவேன்…
மரணம் நேர்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன்…

ஆண் : வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் ஜீவன் வாழுதே…

பெண் : வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் காதல் வாழுதே…

—BGM—

ஆண் : தீராமலே விழி கதை பேச வா…
முகம் பாராமலே உன் மனம் சொல்லவா…

பெண் : கண்ணாலனே என் மிதி மீற வா…
உன் இதழின் வரிகள் வழியே எனை தேட வா…

பெண் : நீயாக மாறும் வரம் வாங்கவா…
தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா…

ஆண் : மருதாணி போல் உன் கை சேரவா…
உன் சிவப்பான வேட்க்கங்கள் பூசவா…

பெண் : அன்பே கடிகார எண்ணாக நீ ஆகவே…
தினமும் உனை சுற்றும் முள்ளாக நானாகிறேன்…

ஆண் : நீயும் கடலாக வந்தால் நான் அலையாகிறேன்…
உன்னை பிரியாமல் உனக்குள்ளே அலைப்பாய்கிறேன்…

ஆண் : எனை கொள்ளாமல் கொள்ளாதே தாங்காது நெஞ்சம்…
என் உயிரெல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும்…

பெண் : அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும்…
அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்…

ஆண் : உன் இதழோடு சேர்த்து…
எனை முழுதாக கோர்த்து…
பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே…

பெண் : உன் விழி ரெண்டும் கூச…
என் கூச்சங்கள் பேச…
எனை பிரியாமல் அணைதாளே உயிர் நீளுமே…

ஆண் & பெண் : வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் ஜீவன் வாழுதே…

ஆண் & பெண் : வா என் உயிரே…
வா என் உறவே…
உன்னாலே என் காதல் வாழுதே…


Notes : Vaa En Uyire Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. வா என் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading