யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாதொடரும்

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

பெண் : சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

பெண் : காதல் வலையிலே ஏன் மாட்டினாய்…
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்…
எட்டிச் செல்கிறாய்…
கட்டிக் கொள்ள வந்தேன்…
விட்டுச் செல்கிறாய்…

பெண் : கிட்ட வந்து நின்றால்…
கெட்டுப் போகுது…
கட்டவிழ்ந்து நெஞ்சும்…
விட்டுப் போகுது…

ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே… ஏ…
புதிர் போடும் கிளியே கிளியே…
வீணான பழியே பழியே…
உனக்கு வந்த இணையே இணையே…
தொடுப்பதென்ன கணையே கணையே…

பெண் : வேறு இடம் உனக்கிருக்கு…
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு…
நான் உண்மை என்று கண்டதும்…
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே…
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை…
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே…
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே…

ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே… ஏ…
ஒரு போதும் ராமன் இங்கே…
உருமாறிப் போவதும் இல்லை…
கண்ணன் என என்னை நீயும்…
காண்பதிலும் நியாயம் இல்லை…

பெண் : என்ன என்ன கதை இருக்கு…
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு…

ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா…
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்…
எல்லை கோட்டை தாண்டினால்…
என் தாபம்தான் தீருமா…
உன் கோபம்தான் ஆறுமா…

ஆண் : கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்…
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. யம்மா யம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading