பொய்யாகி போகாதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லிஜேஷ் குமார்தீபா செல்வன்என்.ஆர். ரகுநந்தன்யாவரும் வல்லவரே

Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

ஆண் : தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா…
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்…

ஆண் : பூவெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள முகம் பார்க்க…
ஊரெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள சொல்ல கேட்க…
என் புள்ள சொல்ல கேட்க…

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

—BGM—

ஆண் : வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு…
வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடு தண்ணி மறந்துருச்சு…
தவுடு தண்ணி மறந்துருச்சு…

ஆண் : தழவாழ இலை போட்டு…
சோறு போட காத்திருந்தேன்…
மல போல போன புள்ள…
சில போல வந்துருக்கான்…

ஆண் : மூஞ்சி எல்லாம் நான் வச்ச…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…

ஆண் : மொத்தத்துல என் உசுரு…
காத்துல தான் போயிருச்சு…
காத்துல தான் போயிருச்சு…

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

—BGM—


Notes : Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil. This Song from Yaavarum Vallavare (2024). Song Lyrics penned by Deepa Selvan. பொய்யாகி போகாதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading