ஒரு துளிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & பவதாரணிஇளையராஜாதொடரும்

Oru Thulir Song Lyrics in Tamil


பெண் : சந்தான லட்சுமி வந்த நேரம்…
சரியான நேரம்…
மங்காத ஜோதி என்றும் இங்கு…
நின்றாடும் கோலம்…

பெண் : நலுங்கொன்று சொல்ல…
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்…
நலம் கோடி காண…
மங்கலங்கள் மனம் போலக் கூடும்…

BGM

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…

BGM

பெண் : குறுகுறு விழிகளில்…
சிறுசிறு நவமணிகள் ஆஹா…
அந்த சிறுசிறு மணிகளில்…
குறுகுறு கவிமணிகள்…

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்…
புதுப்புது கதிரலைகள்…
அந்த புதுப்புது கலைகளில்…
இணைந்தது உயிரலைகள்…

பெண் : கைகளில் கம்பன் பாட்டு…
காவியம் பாடாதோ…
கால்களில் தென்றல் காற்று…
ஓவியம் போடாதோ…

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்…
இந்த செந்தமிழ் புதுக்கவிதை…

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஆண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…
இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

ஆண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

பெண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

BGM

ஆண் : மணிரதம் ஏறிய மரகத வீணை இது…
உன் மது முகம் தூவிய புதுமுகப் பூவும் இது…

பெண் : அணிகலன் அணிந்திட…
அவசியம் இல்லை என… ஆஹா…
கொள்ளை அழகுடன் பழகிடும்…
அதிசயப் பிள்ளை இது…

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்…
மென்மையைத் தந்தாயோ…
சொல்லிய சொல்லுக்குள்ளே…
சொற்ச் சுவை ஆனாயோ…

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்…
அந்த வானுலகம் இயங்கும்… ம்ம்ம்ம்…

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

பெண் : இந்த வானின் மடியிலே…
சிறு பிறையும் வளர்வதென்ன…

பெண் : இந்த அன்னை மடியிலே…
தங்கக் கொடியும் படர்வதென்ன…

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று…
குக்கூ குக்கூ கூ…

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே…

குழு : ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…
பொன் வெயிலே… பொன் வெயிலே…


Notes : Oru Thulir Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஒரு துளிர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading