சேர்ந்து வாழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாஇளையராஜாதொடரும்

Sernthu Vaazhum Song Lyrics in Tamil


ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

—BGM—

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : ஓர் நெய்விளக்கை ஏற்றி வைத்து…
நோன்பிருந்து அங்கே…
சுமந்தே மகிழ்ந்தாய் செல்லப் பிள்ளையே…

ஆண் : பொய் விளக்கைதான் பிடித்து…
போகும் வழி எங்கே…
உனக்கே தெரியும் உண்மை இல்லையே…

ஆண் : இது கொடிய மழையோடு…
புயலும் விளையாடும் நேரமே…
இங்கு சிறிது இளைப்பாறி…
பயணம் தொடர்ந்தாக வேண்டுமே…
உன் வழிக்கு துணை எல்லாம்…
வாழ்க்கைத் துணைவனே மயிலே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

—BGM—

ஆண் : ஓ… வெண் திரையை போட்டு விட்டு…
நாடகத்தை ஆடும்…
இறைவன் விருப்பம் என்ன என்னவோ…

ஆண் : உண்மை தனை மூடி வைத்து…
நீ நடத்தும் கோலம்…
தலைவன் அறிந்தால் துன்பம் அல்லவோ…

ஆண் : சிறு அல்லிக்கொடி ஒன்று…
கள்ளிச் செடியாகிப் போகுமா…
நல்ல முல்லை மனம் ஒன்று…
பாலை வனமாகிப் போகுமா…
இது உனது லீலையா…
இல்லை விதியின் வேலையா சொல்…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…

ஆண் : தொடங்காத உன் வாழ்க்கைப் பயணம்…
அது எவ்வாறு இன்றோடு முடியும்…
இதை எண்ணிப் பாரு மானே…

ஆண் : சேர்ந்து வாழும் நேரம்…
பிரிந்து போவதா…
பிரிந்து சென்று நீயும்…
வருந்தி வாழ்வதா…


Notes : Sernthu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சேர்ந்து வாழும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading