ஏன் என்றால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிஹரன், விஷ்ணுப்ரியா & மாளவிகா மனோஜ்சித்தார்த் விபின்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

Yaen Endral Song Lyrics in Tamil


ஆண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்…

—BGM—

ஆண் : உலகப் பூக்களின் வாசம்…
உனக்குச் சிறை பிடிப்பேன்…
உலர்ந்த மேகத்தைக் கொண்டு…
நிலவின் கறை துடைப்பேன்…

ஆண் & பெண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்…
ஏன் என்றால் உன் பிறந்தநாள்…

—BGM—

ஆண் : இலை ஒன்றில் மேடை அமைத்து…
ஒலி வாங்கி கையில் கொடுத்து…
பறவைகளை பாடச் செய்வேன்…

ஆண் : இலை எல்லாம் கைகள் தட்ட…
அதில் வெல்லும் பறவை ஒன்றை…
உன் காதில் கூவச் செய்வேன்…

ஆண் : உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்…
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவு இடுவேன்…

ஆண் : ஏன் என்றால்…
பெண் : ஏன் என்றால்…
ஆண் : உன் பிறந்தநாள்…

ஆண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்…

—BGM—

ஆண் : மலையுச்சி எட்டி பனிக்கட்டி வெட்டி…
உன் குளியல் தொட்டியில் கொட்டி சூரியனை வடிகட்டி…
பனி எல்லாம் ஒதுக்கிடுவேன் உன்னை அதில் குளிக்கத்தான்…
இதம் பார்த்து இறக்கிடுவேன்…

ஆண் : யாயாயா… கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து… ஓஓஓ…
உன்னோடு நான் நீந்த விடுவேன்… ஓ…

ஆண் : நீ குளித்து முடித்து துவட்டத்தான்…
என் காதல் மடித்துத் தந்திடுவேன்…

ஆண் & பெண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்…
ஏன் என்றால் உன் பிறந்தநாள்…

—BGM—

ஆண் : நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி அணிச்சல் செய்திடுவேன்…
மெழுகுப் பூக்களின் மேலே என் காதல் ஏற்றிடுவேன்…

ஆண் : நீ ஊதினால் அணையாதடி…
நீ வெட்டவே முடியாதடி…
உன் கண்களை நீ மூடடி…
என்ன வேண்டுமோ அதைக் கேளடி…

ஆண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்…

ஆண் & பெண் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்…

—BGM—


Notes : Yaen Endral Song Lyrics in Tamil. This Song from Idharkuthane Aasaipattai Balakumara (2012). Song Lyrics penned by Madhan Karky. ஏன் என்றால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading