யார் இவனோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜி.வி.பிரகாஷ் குமார் & சைந்தவிஜி.வி.பிரகாஷ் குமார்நான் ராஜாவாகப் போகிறேன்

Yaarivano Song Lyrics in Tamil


பெண் : யார் இவனோ…
எந்தன் மௌனம் கலைத்தான்…
யார் இவனோ…
என்னுள் காதல் விதைதான்…

பெண் : யார் இவனோ…
இன்னும் என்னென்ன செய்வான்…
புரியாமல் தவித்தேன்…

—BGM—

ஆண் : முதல் பார்வை காதலை…
இதய கூட்டில் தேக்கினேன்…
அதன் பாரம் தாங்கியே…
நகர நாட்கள் போக்கினேன்…

ஆண் : உன்னை காணும் போதுதான்…
உயிரின் தேவை காண்கிறேன்…
உன்னை நீங்கும் போதுதான்…
நினைவே தேவை என்கிறேன்…

பெண் : யார் இவனோ யார் இவனோ…
பகலில் வந்தானே…
எந்தன் இமைகளிலே மயிலிறகால்…
தொட்டு சென்றானே…

பெண் : யார் இவனோ யார் இவனோ…
இரவில் வந்தானே…
எந்தன் விழிகளிலே கனவுகளை…
நட்டு சென்றானே…

பெண் : யார் இவனோ…
எந்தன் மௌனம் கலைத்தான்…
யார் இவனோ…
என்னுள் காதல் விதைதான்…

பெண் : யார் இவனோ…
இன்னும் என்னென்ன செய்வான்…
புரியாமல் தவித்தேன்…

—BGM—

பெண் : தெரியாமல் எனை தீண்டி…
ஒரு போதை கொள்கின்றான்…
தடுமாறும் ஒரு சாக்கில்…
எனை முட்டி செல்கின்றான்…

பெண் : முறையில்ல கதை எல்லாம்…
குறும்பாக சொல்கின்றான்…
ரசித்தேனா முறைத்தேனா…
என பார்த்து செல்கின்றான்…

ஆண் : போலி வேடம் போடும் பெண்ணே…
உந்தன் முகத்திரை உடைத்துவிடு…
இந்த இரவும் கரையும் முன்னே…
எந்தன் கையில் கிடைத்துவிடு…

பெண் : யார் இவனோ…
எந்தன் மௌனம் கலைத்தான்…
யார் இவனோ…
என்னுள் காதல் விதைதான்…

பெண் : யார் இவனோ…
இன்னும் என்னென்ன செய்வான்…
புரியாமல் தவித்தேன்…

—BGM—

பெண் : அலை போலே எழுகின்றேன்…
அவன் காணும் நேரத்தில்…
இல்லை போலே விழுகின்றேன்…
முடிவில்லா ஆழத்தில்…

பெண் : அளவாக சிரித்தேனே…
கண்ணாடி பிம்பத்தில்…
அவன் போலே நடித்தேனே…
அதில் வைக்கும் முத்தத்தில்…

ஆண் : ஹே பிம்பம் கூட நொறுங்கிடும் பெண்ணே…
உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே…
நம்பவில்லை இதுவரை இதயம்…
நீயும் காதல் கிறக்கத்திலே…

—BGM—

ஆண் : ஓஒ… முதல் பார்வை காதலை…
இதய கூட்டில் தேக்கினேன்…
அதன் பாரம் தாங்கியே…
நகர நாட்கள் போக்கினேன்…

ஆண் : உன்னை காணும் போதுதான்…
உயிரின் தேவை காண்கிறேன்…
உன்னை நீங்கும் போதுதான்…
நினைவே தேவை என்கிறேன்…

—BGM—


Notes : Yaarivano Song Lyrics in Tamil. This Song from Naan Rajavaga Pogiren (2013). Song Lyrics penned by Madhan Karky. யார் இவனோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading