யார் அந்த ஓவியத்தை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & நிவாஸ்யுவன் ஷங்கர் ராஜாகளத்தில் சந்திப்போம்

Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் அந்த ஓவியத்தை…
நடமாட வைத்ததோ…
உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ…

ஆண் : கண்ணாடி மாளிகையே…
கண் வைத்து பார்த்ததோ…
முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ…

ஆண் : உலக அழகி இல்லை…
உலவும் நிலவும் இல்லை…
பழக தோழியா தெரியிறா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அதிர சிரிப்பும் இல்லை…
அதிக சிவப்பும் இல்லை…
அழகின் ஓவியமா அசத்துறா…

ஆண் : கவிதை போல வந்து…
கனவு போல வந்து…
உனக்கு அப்படியே பொருந்துறா…
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா…

ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு…
அயில மீன் கண்ணே கண்ணு…
உனக்கான ஜோடியின்னு…
நான் பார்த்து அசந்த பொண்ணு…

ஆண் : என்னன்னு நான் சொல்ல…
அழகுனா அத்தனை அழகு…
அன்றாடம் நீ மெல்ல…
ஐ லவ் யூ சொல்லி பழகு…

—BGM—

ஆண் : நான் பார்த்த தேவதைக்கு…
சிறகில்லை உண்மையில்…
அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில்…

ஆண் : தரை மேலே நின்ற போதும்…
மிதக்கின்றாள் மென்மையில்…
தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில்…

ஆண் : லட்சம் பூ பறிச்சு…
மிச்சம் தேன் தெளிச்சு…
வச்ச அழகு அவ அழகடா…

ஆண் : அச்ச பார்வையில…
உச்சம் கவிதை ஒன்னு…
அச்சில் எட்டி விடும் அடடடா…

ஆண் : கச்ச தீவுக்கொரு…
மச்சம் வச்சது போல்…
பச்சை பசுமை அவ பாரடா…
அழகடா அவளடா அசந்து போலாம்டா…

ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம்…
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்…
அவள் வந்து முன்னே நின்றால்…
நிலவெல்லாம் பின்னே நிற்கும்…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—

ஆண் : கண்ணாடி சிலையை போல…
முன்னாடி சிரிச்சு போறா…
ஆத்தாடி உன் மனச…
அங்காடி ஆக்க போறா…

ஆண் : மொத்தத்தில் அவள் போல…
பெண் இந்த ஊருக்குள் இல்லை…
பக்கத்தில் அவள் வந்தா…
பறந்திடுவாய் வானில் மெல்ல…

—BGM—


Notes : Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil. This Song from Kalathil Santhippom (2021). Song Lyrics penned by Pa Vijay. யார் அந்த ஓவியத்தை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading