வில்லாதி வில்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துநரேஷ் ஐயர் & ரீட்டாகணேஷ் ராகவேந்திராஅசுரகுரு

Villadhi Villi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…

ஆண் : நஞ்சுள்ளக்…
கள்ளன் என்றே…
எண்ணம் கொண்டாய்…
நெஞ்சுள்ள நல்லன் என்று…
கண்டறிந்தாய்…
சிடுசிடுவெனச் சீண்டிட்டாய்…
சடுகுடு என ஆடிட்டாய்…
பரபரவென தினமும்…
போரிட்டாய்…

ஆண் : ஓ…
என் திறமை வாசித்தாய்…
என் தனிமை நேசித்தாய்…
திசை மாறிய…
தென்றல் போல…
நின்றாய்…

BGM

பெண் : தடுப்பணை ஏதும் இல்லா…
நதித் தொடர் நான்தானே…
நிராயுதன் உன்னைக் கண்டு…
சற்றே நின்றேனே…

பெண் : அடாவடி…
வாதம் செய்யும்…
தடாலடி பெண்தானே…
அலாவுதீன் பூதம் போல…
அன்பாய் பூத்தேனே…

பெண் : வழி தவறிய சோகம்…
விரைவினில் அது தீரும்…
உன்னை மறந்து…
உந்தன் விழிகள்…
தூங்குமே… ஓ…
நிழல் உலகம் போதும்…
நினை அழைக்கும் காலம்…
இருளை விட்டு…
வெளியே வருவாய்…
நீயே…

ஆண் : வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…

BGM

ஆண் : இனிமைகள்…
ஏதும் இல்லா…
துணிகரம் நான்தானே…
மனோகரி உந்தன் நட்பில்…
மவ்வம் கண்டேனே…

ஆண் : அளாவுதல் ஏதுமின்றி…
உலா வரும் ஆண்தானே…
களேபரக்கன்னி உந்தன்…
பரிவில் சரிந்தேன்னே…

ஆண் : தலை மறைகிற என்னில்…
குறை உள்ள…
ஒரு நெஞ்சில்…
முதல் முதலாய்…
மாற்றம் ஒன்று…
தோன்றுதே… ஓ…
தரிக்கெட்ட ஒரு வானம்…
தரை இறங்கிடும் நேரம்…
அரவணைக்கும்…
பூமிப் பாதை நீயே…

ஆண் : வில்லாதி வில்லி…
எந்தன் பக்கம் வந்தாய்…
தூங்காமல் துப்பறிந்து…
தோழி ஆனாய்…

ஆண் : நஞ்சுள்ளக்…
கள்ளன் என்றே…
எண்ணம் கொண்டாய்…
நெஞ்சுள்ள நல்லன் என்று…
கண்டறிந்தாய்…

பெண் : வெகு நாளாய்…
குறி வைத்தேன்…
விரல் தடயங்கள்…
சோதித்தேன்…
உன்னைச் சிறையிட…
வழிகள் தேடினேன்… ஓ…
உன் சரிதை வாசித்தேன்…
உன் தனிமை நேசித்தேன்…
உனக்கென சில கேள்விகள்…
பரிசாய் தந்தேன்…


Notes : Villadhi Villi Song Lyrics in Tamil. This Song from Asuraguru (2020). வில்லாதி வில்லி பாடல் வரிகள். Asuraguru Tamil Movie ft. Vikram Prabhu and Mahima Nambiar in lead roles Villadhi Villi is sung by Naresh Iyer, Rita. Lyrics penned by Kabilan Vairamuthu. Asuraguru is Directed by A Raajdheep, Music composed by Ganesh Raghavendra, Produced by JSB Sathis.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top