யாரைத் தேடி நெஞ்சமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிகே.எஸ். சித்ராதர்ம பிரகாஷ்வால்டர்

Yaarai Thedi Nenjame Song Lyrics in Tamil


BGM

பெண் : யாரைத் தேடி நெஞ்சமே…
கண்ணில் ஜாடைப் பேசுது…
நீயும் என்னை நெருங்க…
ஒரு கோடிச் சாரல் வீசுது…

பெண் : மேகக் கூட்டம்…
யாவுமே… ஏ…
பாதம் கீழே ஓடுது…
கடலின் மீது…
கடந்துப் போகும்…
பறவையாய் நீ…
இதயம் கடந்தாய்…
ஓ… ஓ… ஹோய்…

பெண் : யாரைத் தேடி நெஞ்சமே…
கண்ணில் ஜாடைப் பேசுது…
நீயும் என்னை நெருங்க…
ஒரு கோடிச் சாரல் வீசுது…

BGM

பெண் : ஓ…
தாவும் குழந்தைப்…
போல நெஞ்சம்…
உன்னைக் கண்டு…
தாவிச் செல்ல…
நீயும் என்னைத்…
தூக்கிக் கொஞ்ச…
தவிக்கும் உயிரை…
என்ன சொல்ல…

பெண் : இரு விழி இன்று…
வழி பறிச் செய்து…
போகும் உந்தன் பார்வையில்…
இரு உடல் இன்று…
ஒரு உயிர் என்று…
ஆகும் உந்தன் தீண்டலில்…

பெண் : எந்தன்…
ஆயுள் ரேகை உந்தன்…
கையில் பார்க்கிறேன்… ஏ… ஏ…

பெண் : யாரைத் தேடி…
நெஞ்சமே… ஏ…
கண்ணில் ஜாடைப் பேசுது…
நீயும் என்னை நெருங்க…
ஒரு கோடிச் சாரல் வீசுது…

BGM

பெண் : காற்றில்…
ஈரப் பதங்கள் கூடும்…
மாயம் தந்தாய்…
நீயும் மெல்ல…
ஆற்றில் ஓடும்…
இலையைப் போல…
நானும் உன்னில்…
நீந்திச் செல்ல…

பெண் : குறுந்தொகைப் போலே…
குறும்புகள் அள்ளி…
கையில் நீ நீட்டினாய்…
இதுவரை இந்த…
உணர்வுகள் இல்லை…
நீதான் உயிர் நீவினாய்…

பெண் : நிழலைப் போல…
நீயும் வந்து…
மழலை ஆக்கினாய்…
ஆ… ஆ… ஆ…

பெண் : யாரைத் தேடி நெஞ்சமே…
கண்ணில் ஜாடைப் பேசுது…
நீயும் என்னை நெருங்க…
ஒரு கோடிச் சாரல் வீசுது…

பெண் : மேகக்கூட்டம் யாவுமே…
பாதம் கீழே ஓடுது…
கடலின் மீது…
கடந்துப் போகும்…
பறவையாய் நீ…
இதயம் கடந்தாய்….
ஓ… ஓ… ஹோய்…

பெண் : யாரைத் தேடி நெஞ்சமே…
கண்ணில் ஜாடைப் பேசுது…
நீயும் என்னை நெருங்க…
ஒரு கோடிச் சாரல் வீசுது…


Notes : Yaarai Thedi Nenjame Song Lyrics in Tamil. This Song from Walter (2020). Song Lyrics penned by Arun Bharathi. யாரைத் தேடி நெஞ்சமே பாடல் வரிகள். Walter Tamil Movie starring Sibi Sathyaraj, Shirin Kanchwala, Samuthirakani and Natty in the lead roles. Music Composed by Dharmaprakash. Vocals rendered by KS Chitra. Lyrics penned by Arun Bharathi.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading