வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாகாலமெல்லாம் காதல் வாழ்க

Vennilave Vennilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா…
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா…
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா…

ஆண் : சின்ன மூக்குத்திப்பூ…
வரும் முதல் சந்திப்பூ…
அந்தப் பாலாற்றில் நீராட வா…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா…
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா…

பெண் : சின்ன மூக்குத்திப்பூ…
வரும் முதல் சந்திப்பூ…
அந்தப் பாலாற்றில் நீராட வா…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா…
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா…

—BGM—

ஆண் : வெள்ளிப்பனி மேகங்கள்…
செல்லும் ஊர் கோலங்கள்…
அவள் பாதத்தில் என்னைச் சேருங்கள்…

பெண் : அந்த மழை மேகங்கள்…
எந்தன் எதிர்காலங்கள்…
காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்…

ஆண் : நெஞ்சில் அலை மோதும்…
கடல் போலே ஓசை…

பெண் : வந்து கரையேறும்…
அலைக்கென்ன ஆசை…

ஆண் : இன்ப மயக்கம் என்ன…
பெண் : சின்னத் தயக்கம் என்ன…

ஆண் : இந்தக் காலங்கள் தவக்கோலங்கள்…
ஹா ஹோ ஹோ…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா…
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா…

—BGM—

ஆண் : ஒரு புல்லாங்குழல்…
பாடும் தனி ராகங்கள்…
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா…

பெண் : அந்த சுரம் பாடினால்…
தொட்டுச் சுகம் தேடினால்…
கன்னி மாடத்தில் குளிர் காலமா…

ஆண் : நித்தம் ஒரு கோடி…
கனவோடு தூக்கம்…

பெண் : ஆஹா… புத்தம் புதுப் பார்வை…
புரியாத ஏக்கம்…

ஆண் : ரத்த நாளங்களில்…
பெண் : ஓடும் தாளங்களில்…

ஆண் : ஒரு தாலாட்டுத்தான் பாடுமோ…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா…
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா…

ஆண் : சின்ன மூக்குத்திப்பூ…
வரும் முதல் சந்திப்பூ…
அந்தப் பாலாற்றில் நீராட வா…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா…
அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா…


Notes : Vennilave Vennilave Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kadhal Vazhga (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading