வெள்ளை புறா ஒன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாபுதுக்கவிதை

Vellai Pura Ondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…

ஆண் : நமது கதை புது கவிதை…
இலக்கணங்கள் இதற்கு இல்லை…

பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓ…

ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…

BGM

பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது…
கரைகள் என்ன வேலியோ…

ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி…
பாதை மாற கூடுமோ…

பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்…
முகங்களின் நிறம் பார்க்குமோ…

ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்…
பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்…

ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட…

பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே… ஆஆஆஆ…

BGM

ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்…
காவல் தன்னை மீறுமே…

பெண் : காலம் மாறும் என்ற போதும்…
காதல் நதி ஊறுமே…

ஆண் : வரையரைகளை மாற்றும் போது…
தலைமுறைகளும் மாறுமே…

பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே…
ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே…

பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக…

ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…

பெண் : நமது கதை புது கவிதை…
ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை…
பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓஓ…

ஆண் & பெண் : லாலா லலலலா லாலா லாலா லலலலா…
லாலா லலலலா லாலா லாலா லலலலா…


Notes : Vellai Pura Ondru Song Lyrics in Tamil. This Song from Puthukavithai (1982). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளை புறா ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading