வெள்ளை மயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்உதித் நாராயண் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாசமர்

Vellai Maiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…

பெண் : ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு…
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு…
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே…
வாழ வேண்டும் உன்னோடு…

ஆண் : ஆசை நினைவடி…
இது ஆறாம் பிறையடி…
உனை கண்டேன் ஒரு நோடி…
அது காதல் முதற்படி…

பெண் : மீசை புல்லின் மேல்…
இவள் முத்தம் பனி துளி…
ஆண் : ஹே ஹே ஹே… ஏஏ…

பெண் : இரு இதயம் சேரவே…
ஆண் : ஹோ ஹோ ஹோ…

பெண் : இனி இல்லை இடைவெளி…

ஆண் : வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…

பெண் : ஹையை யே… ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு…
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு…
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே…
வாழ வேண்டும் உன்னோடு…

—BGM—

ஆண் : பிருந்தாவனம் தூங்காது வானம்…
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்…

பெண் : ராக்கோழியாய் கூவுது முச்சு…
கை ரேகை நூலில் நெய்த சேலை முந்தானையாச்சு…

ஆண் : சதை நிலா உன்னை நெஞ்சிலே…
விதை என மூடி வைக்கவா…
மதம் பிடித்தாடும் யானையாய்…
மனக்குளம் வெந்நீர் ஆன பின்பு கூட பூ பூக்குதே…

—BGM—

பெண் : மூன்றாம் பிறை முந்நூறு மேகம்…
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்…

ஆண் : ஆனவரை ஆனந்த மோகம்…
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்…

பெண் : மழைத்துளி வானில் தங்கினால்…
மணல்வெளி ஈரமாகுமா…
சுவை சுவை என்று கூறினேன்…
முதல் முதல் முத்தம் என்னும்…
பூவை கிள்ளி முத்தாடவா…

பெண் : மீசை புல்லின் மேல்…
இவள் முத்தம் பனி துளி…
ஆண் : ஹே ஹே ஹே… ஏஏ…

பெண் : இரு இதயம் சேரவே…
ஆண் : ஹோ ஹோ ஹோ…

பெண் : இனி இல்லை இடைவெளி…

—BGM—


Notes : Vellai Maiyil Song Lyrics in Tamil. This Song from Samar (2013). Song Lyrics penned by Kabilan. வெள்ளை மயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading