வீரனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஏ. ஆர். அமீன்ஏ.ஆர்.ரகுமான்மாமன்னன்

Veerane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆதி ஆதி ஆழம் கேட்டு…
ஆர்பரிக்கும் காடு…
கோராமான காட்டில் வெல்ல…
கூடி வேட்டை ஆடு…

ஆண் : நீதி கேட்டு நீதி கேட்டு…
தீ பிடிக்கும் காடு…
சீறும் காலை கூட்டம் மோத…
சிங்கமே நீ ஓடு…

ஆண் : ஆத்திரங்கள் ஆறும் மட்டும்…
தூக்கமில்லையே…
போர்க்காலத்தில் காயம் உண்டு…
தோல்வியில்லையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விடாமல்… துணிந்தால்…
வேங்கையை…
கொல்லும் பூனையே…

ஆண் : ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
கை கட்டிடாதே…
பகையை விட்டிடாதே…
புது பானர் கோட்டம் பாடும்…
உன்னை முந்தி ஓடு…

ஆண் : ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
சுட்டாலும் தீயிலே…
மான் கொம்பு வாழும்…
கூர் தீட்ட தீட்ட கோவம் கூடும்…

ஆண் : செயல் செய்திடும் காலம் நம்மிடம்…
ஜெயம் ஜெயம் ஜெயம்…
செயல் செய்திடும் காலம் நம்மிடம்…
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றே…

BGM

ஆண் : கடிவாளம் போட்டும்…
கையை நீயே ஒரு நாளும் நம்பாதே…
பகை மோதும் போது…
மூளும் வீரம் வீணே வேம்பாதே…

ஆண் : வாலேடுத்து நின்ற பின்னே…
வார்த்தை ஏதும் இல்லையே…
தோள்பறைக்கு தோளுயர்த்தி…
காட்டு உண்மையை…

ஆண் : ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
தொட்டாலும் தேனீயே…
கொட்டி தீர்க்கும்…
ஒன்றாக கூடி கூட்டை காக்கும்…

BGM

ஆண் : தனி பொந்தில் கேட்கும் கூகை சத்தம்…
காட்டை தாண்டாதே…
அதிகாரம் காட்டும் பேயின் ஆட்டம்…
நியாயம் பாக்காதே…

ஆண் : காக்கை கோட்டம் போடும் கூச்சல்…
பாட்டுக்கான யுத்தமே…
குஞ்சை காக்க கொக்கரிக்கும்…
கோழி நித்தமே…

ஆண் : ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
கை கட்டிடாதே…
பகையை விட்டிடாதே…
புது பானர் கோட்டம் பாடும்…
உன்னை முந்தி ஓடு…

ஆண் : ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
சுட்டாலும் தீயிலே…
மான் கொம்பு வாழும்…
ஒன்றாக கூடி கூட்டை காக்கும்…

ஆண் : செயல் செய்திடும் காலம் நம்மிடம்…
ஜெயம் ஜெயம் ஜெயம்…
செயல் செய்திடும் காலம் நம்மிடம்…
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றே…


Notes : Veerane Song Lyrics in Tamil. This Song from Maamannan (2023). Song Lyrics penned by Yugabharathi. வீரனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading