வருவாண்டி தருவாண்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சூலமங்கலம் ராஜலட்சுமி & எம்.ஆர்.விஜயாகுன்னக்குடி வைத்தியநாதன்தெய்வம்

Varuvaandi Tharuvaandi Malayaandi Song Lyrics in Tamil


BGM

பெண் : வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி…
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி…

பெண் : வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
பழனி மலையாண்டி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி…
அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி…
அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி…
அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி…

பெண் : நவலோக மணியாக நின்றாண்டி…
நவலோக மணியாக நின்றாண்டி…
என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி…
என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி…
அவன் தாண்டி…

பெண் : வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…

BGM

பெண் : பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி…
சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி…
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி…
சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி…

BGM

பெண் : காலாற மலையேற வைப்பாண்டி…
காலாற மலையேற வைப்பாண்டி…
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று…
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி…

பெண் : வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
பழனி மலையாண்டி…

BGM

பெண் : சித்தர்கள் சீடர்கள் பல கோடி…
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி…
சித்தர்கள் சீடர்கள் பல கோடி…
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி…
முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி…

பெண் : சித்தர்கள் சீடர்கள் பல கோடி…
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி…
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி…
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி…
திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி…
திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி…

பெண் : வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி…
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
பழனி மலையாண்டி…
பழனி மலையாண்டி… பழனி மலையாண்டி…


Notes : Varuvaandi Tharuvaandi Malayaandi Song Lyrics in Tamil. This Song from Deivam (1972). Song Lyrics penned by Kannadasan. வருவாண்டி தருவாண்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading