வருகிறாய் தொடுகிறாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Varugiraai Song Lyrics in Tamil


ஆண் : போ போ…

—BGM—

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…

—BGM—

ஆண் : வர வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற…
காதல் கடன்காரி…
அடி உலகில்எவளும் உனைப்போல் இல்லையே…
அழகிய கொலைகாரி…

பெண் : குளிர் நிலவினில் நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய்…
நீ ஒரு அசடில்லடா…
அட உனக்கு ஒரு உயில்தான் எழுதிய மயில்தான்…
நீ இதை அனுபவிடா…

ஆண் : அய்யோ அம்மா நீ பொல்லாத ராட்சசி…
ஏன்டி என் கற்போடு தோணுகிறாய்…
நானா உனை வாவென்று கூறினேன்…
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்…

பெண் : உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்…
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்…
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று…
உறுதியை தந்து உதருவதென்ன…

ஆண் : ஓ… தவித்து போதும் தனிமையில் என்னை…
இருக்கவிடு என்னை இருக்கவிடு…
இருக்கவிடு அன்பே இருக்கவிடு…

—BGM—

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

—BGM—

ஆண் : விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு…
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்…
அடி இதயக்கதவை இறுக்கி அணைத்தேன்…
எதிர் காத்தை கொளுத்துகிறாய்…

பெண் : நம்ம கடற்கரை மணலில் மடியினில் கிடந்த…
நாட்களை மறந்தாச்சா…
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு…
காத்துல பறந்தாச்சா…

ஆண் : ஏதோ ஏதோ நான் கேட்டேனோ பேசினேன்…
தூண்டில் நீ போட்டாய் நான்மாட்டினேன்…
இன்று நான் விடுதலை அடைந்தவன்…
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்…

பெண் : தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்…
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே…
கடலென்ற நினைப்பு கலக்கின்ற நடிப்பு…
உனையன்றி இங்கே உறுதுணை இல்லையே…

ஆண் : ஓ… காதல் செய்தேன்நான் காதல் செய்தேன்…
மறக்கவிடு உன்னை மறக்கவிடு…
மறக்கவிடு அன்பே மறந்துவிடு…
மறக்கவிடு…

—BGM—

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலேசுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…


Notes : Varugiraai Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. வருகிறாய் தொடுகிறாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading