மயிலிறகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Mayiliragae Song Lyrics in Tamil


BGM

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கைஎழுத்து… அன்பே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

BGM

பெண் : மதுரை பதியை மறந்து…
உன் மடியினில் பாய்ந்தது வைகை…
மெதுவா மெதுவா மெதுவா…
இந்த வைகையில் வைத்திடு கை…

ஆண் : பொதிகை மலையை பிரிந்து…
என் பார்வையில் நீந்துது தென்றல்…
அதை நான் அதை நான் பிடித்து…
மெல்ல அடைத்தேன் மனசிறையில்…

பெண் : ஓர் இலக்கியம்…
நம் காதல்…

ஆண் : வான் உள்ள வரை…
வாழும் பாடல்…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவாய் மழை நிலவாய்…
விழியில் எல்லாம் உன் உலா…

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீ தானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

ஆண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

BGM

பெண் : தமிழா தமிழா தமிழா…
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா…
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்…
கவி ஆற்றிட நீ வருவாய்…

ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்…
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்…
உனக்கும் எனக்கும் விருப்பம்…
அந்த மூன்றாம் பால் அல்லவா…

பெண் : பால் விளக்கங்கள்…
நீ கூறு…

ஆண் : ஊர் உறங்கட்டும்…
உரைப்பேன் கேளு…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…


Notes : Mayiliragae Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. மயிலிறகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading