| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஆர்.வி.உதயகுமார் | கே. எஸ். சித்ரா | இளையராஜா | கிழக்கு வாசல் |
Vanthathe Oh Kungumam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
வான் மேகம் தேன் தூவ…
நாளும் நீ பாட…
பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
—BGM—
பெண் : பூத்தது மெல்ல… ஓஓஓ…
ஆனந்த முல்லை… ஓஓஓ…
ஆசையை சொல்ல… ஓஓஓ…
வார்த்தைகள் இல்லை… ஓஓஓ…
பெண் : கூண்டில் வாழ்ந்த வானம்பாடி…
மீண்டு வந்த நாளிது…
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்…
ராகம் தேடி பாடுது…
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்… ஓ…
பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
வான் மேகம் தேன் தூவ…
நாளும் நீ பாட…
பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
—BGM—
பெண் : ஆயிரம் மின்னல்… ஓஓஓ…
மேனியில் மின்ன… ஓஓஓ…
பாவையின் கன்னம்… ஓஓஓ…
ஏங்கியது என்ன… ஓஓஓ…
பெண் : மாலை வெயில் நேரில் வந்து…
மஞ்சள் வண்ணம் பூசுது…
வாடைக் காற்றில் ஜாதி பூக்கள்…
ஜாடையாக பேசுது…
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்… ஓஓஓ…
பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
வான் மேகம் தேன் தூவ…
நாளும் நீ பாட…
பெண் : வந்ததே ஓஓ குங்குமம்…
தந்ததே ஓஓஓ சம்மதம்…
Notes : Vanthathe Oh Kungumam Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. வந்ததே பாடல் வரிகள்.


