பாடிப் பறந்த கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Paadi Parantha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

—BGM—

ஆண் : ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…

ஆண் : கண்ட கனவு அது கானா ஆச்சு…
கண்ணு முழிச்சா அது வாழாது…
வட்ட நிலவு அது மேலே போச்சு…
கட்டியிழுத்தா அது வாராது…
வீணாச தந்தவரு யாரு யாரு…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

—BGM—

ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…

ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…

ஆண் : கல்லிலடிச்சா அது காயம் காயம்…
சொல்லிலடிச்சா அது ஆறாது…
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்…
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது…
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…


Notes : Paadi Parantha Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. பாடிப் பறந்த கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading