| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | ஹரிஹரன் | தேவா | நினைத்தேன் வந்தாய் |
Vannanilavae Vannanilavae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…
ஆண் : ஒரு நூறு நிலாவின்…
வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்…
அடி கோடி புறாக்கள்…
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்…
ஆண் : கண் மூடினால் உன் ஞாபகம்…
பூப்பூக்குதே என் வாலிபம்…
ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…
—BGM—
ஆண் : கண்கள் அறியா காற்றைப் போலே…
கனவில் என்னை தழுவியதென்ன…
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்…
பூவே உந்தன் முகவாி என்ன…
ஆண் : மெது மெதுவாய் முகம் காட்டும்…
பெளா்ணமியே ஒளியாதே…
பெயரை கூட சொல்லாமல்…
என் உயிரை பிழியாதே…
ஆண் : நினைவோடு தந்ததையெல்லாம்…
நிஜமாகத் தருவாயா…
உயிருக்கு உயிரைத் தந்து…
உறவாட வருவாயா…
ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…
—BGM—
ஆண் : கூந்தல் காட்டில் வழி தொியாமல்…
மாட்டி கொண்டேன் என் வழியென்ன…
உன்னை இங்கே தேடித்தேடி…
தொலைந்து போனேன் என் கதி என்ன…
ஆண் : மழை மேகம் நானானால்…
உன் வாசல் வருவேனே…
உன் மீது மழையாகி…
என் ஜீவன் நனைவேனே…
ஆண் : கனவோடு வந்தாய் பெண்ணே…
நோில் வரப் பொழுதில்லையோ…
தவம் போதவில்லை என்றே…
தேவதை வரவில்லையோ…
ஆண் : வண்ண நிலவே வண்ண நிலவே…
வருவது நீதானா…
வாசனைகள் வருகிறதே…
வருவது நிஜம்தானா…
ஆண் : ஒரு நூறு நிலாவின்…
வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்…
அடி கோடி புறாக்கள்…
கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்…
ஆண் : கண் மூடினால் உன் ஞாபகம்…
பூப்பூக்குதே என் வாலிபம்…
—BGM—
Notes : Vannanilavae Vannanilavae Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. வண்ண நிலவே பாடல் வரிகள்.


