வாலிபரே வாலிபரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Valibare Valibare Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாலிபரே வாலிபரே…
நாட்டில் உள்ள இளம் காளையரே…
காதலரே காதலரே…
காதலித்து வரும் சோதரரே…

ஆண் : காதலித்த பின்னே ஞானம் பிறந்தது…
காதலித்தால் அது பாவம் புரிந்தது…

ஆண் : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…

ஆண் : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

—BGM—

ஆண் : பொய்யாக வந்திட்ட மானை நம்பி நம்பி…
சீதை ஏமாந்தது அந்தக் காலம்…
குழு : ஸ்ரீலங்கா போனதும் அந்தக் காலம்…
ஆண் : ஆமாம்…
குழு : சிறை வாசம் பண்ணதும் அந்தக் காலம்…

ஆண் : அட பெண்ணாக வந்திட்ட மானை நம்பி…
ராமர் ஏமாந்து போவது இந்தக் காலம்…

குழு : அம்போன்னு போவது இந்தக் காலம்…
சம்போன்னு ஆவதும் இந்தக் காலம்…

ஆண் : பார்வதி ஈசனின் மேனியிலே…
பாதியாய் ஆனது அந்தக் காலம்…
ஈசனப் பார்வதி நீங்குவது…
ஈஸியாய் போனது இந்தக் காலம்…

ஆண் : கண்ணாலே சூட்டத்தான் ஏத்திடுவா…
பின்னாலே பிலேட்டத்தான் மாத்திடுவா…
என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
ஆண் : ஆமாமோய்…
குழு : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

ஆண் : வாலிபரே வாலிபரே…
நாட்டில் உள்ள இளம் காளையரே…
காதலரே காதலரே…
காதலித்து வரும் சோதரரே…

—BGM—

ஆண் : லவ்வுன்னு கிவ்வுன்னு தலையப் பிச்சிக்கிட்டு…
லோ லோன்னு அலையாதே தம்பி தம்பி…

குழு : லோலாக்கு மாட்டுற பெண்ண நம்பி…
லோ ப்ரஷர் ஏறும்டா செல்லத் தம்பி…

ஆண் : அட பொண்ணத்தான் ஓஹோன்னு…
போற்றிப் பாடிப் பாடி…
ரீல் விட்டான் நம்மூரு புலவனுங்க…

குழு : ஒண்ணுக்கும் உதவாத புழுகனுங்க…
உண்மைகள் தெரியாத குருடனுங்க…

ஆண் : பூவுன்னு சொன்னாங்க பொண்ணுகள…
சுள்ளுன்னு குத்துற முள்ளுகள…
நிலவுன்னு சொன்னாங்க கண்ணுகள…
நெருப்பாகச் சுடுகிற கொள்ளிகள…

ஆண் : அன்பேன்னு அத்தான்னு கூறிடுவா…
சமயத்தில் காலத்தான் வாரிடுவா…
என்னான்னு நான் பட்டப் பாட்டச் சொல்ல…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
ஆண் : அய்யாயோ…
குழு : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

குழு : வாலிபரே வாலிபரே…
நாட்டில் உள்ள இளம் காளையரே…
காதலரே காதலரே…
காதலித்து வரும் சோதரரே…

ஆண் : காதலித்த பின்னே ஞானம் பிறந்தது…
காதலித்தால் அது பாவம் புரிந்தது…

ஆண் : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…

ஆண் : அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…

குழு : பெண்களை நம்பாதே…
கன்னி இளம் பெண்களை நம்பாதே…
அப்பவே சொன்னாரே…
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே…


Notes : Valibare Valibare Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. வாலிபரே வாலிபரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading