வாழும் மட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம்இளையராஜாகாளி (1980)

Vaazhumattum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

ஆண் : அட ஆடியில் செய்தவன்…
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா…
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்…
பின்னால் பாரடா…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

—BGM—

ஆண் : காலம் நம்மைப் பார்த்து கண்ணடித்தால்…
பதவி வரும்…
அதுவே மெதுவாக ஜாடை செய்தால்…
சிறையும் வரும்…

ஆண் : பலிக்கும் வரையில் மகராஜா…
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்…
சுக்கிரனோ சூரியனோ சனி பகவான்தானோ…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

—BGM—

ஆண் : கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு பிறப்பெடுத்தான்…
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு அவதரித்தான்…

ஆண் : நமக்கும் இதுதான் அவதாரம்… ஹஹா…
உன் பேரையும் என் பேரையும் ஊரார் சொன்னால்…
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

—BGM—

ஆண் : அண்ணன் தம்பிகளும் நம்மை வெல்வதில்லை…
நம்மை தனித் தனியே எண்ணிக் கொள்வதில்லை…

ஆண் : ஒரு தாய் வயிற்றில் மகனானோம்…
சாலைகளே காலங்களே சொல்லுங்களே…
இருவரிலே ஒருவரையே காணுங்களே…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

ஆண் : அட ஆடியில் செய்தவன்…
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா…
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்…
பின்னால் பாரடா…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக…
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா…
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்…

—BGM—


Notes : Vaazhumattum Song Lyrics in Tamil. This Song from Kaali (1980). Song Lyrics penned by Kannadasan. வாழும் மட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading