வான் வெளியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ரவிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாராஜா நீ வாழ்க

Vaan Veliyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் வெளியில் நீ மலர…
என் நினைவில் தீ வளர…
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது…
தேவதையோ சொல் வெண்ணிலவே…

பெண் : வான் வெளியில் நீ மலர…
என் நினைவில் தீ வளர…
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது…
மன்னவனோ சொல் வெண்ணிலவே…

BGM

ஆண் : இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு…
பெண் : என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு…

ஆண் : கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில்…
ஒரு புல்லாங்குழல் வந்ததோ…

பெண் : ராதை இங்கு கண் சிவக்க…
ராகம் நூறு நீ படிக்க…

பெண் : ராதை இங்கு கண் சிவக்க…
ராகம் நூறு நீ படிக்க…
ராஜா உன் விளையாடலோ…

ஆண் : வான் வெளியில் நீ மலர…
என் நினைவில் தீ வளர…

பெண் : மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது…
மன்னவனோ சொல் வெண்ணிலவே…

BGM

ஆண் : ஹே… நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது…
பெண் : நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது…

ஆண் : ஹே… நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது…
பெண் : நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது…

ஆண் : கைவளை நழுவுது கால் தடுமாறுது…
கட்டுப்படலாகாது பாப்பா… ஹா…

பெண் : மைவிழி சொருகுது மந்திரம் போடுது…
என் மனக் கதவுக்கு தாப்பா…

ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன்…
கோட்டையும் புடிப்பேன்…
புலிக்குப் பிறந்தவன் நானடி…

ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன்…
கோட்டையும் புடிப்பேன்…
புலிக்குப் பிறந்தவன் நானடி…

பெண் : பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன்…
பாக்கி வேலையை நீ முடி…

பெண் : வான் வெளியில் நீ மலர…
என் நினைவில் தீ வளர…

ஆண் : தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது…
தேவதையோ சொல் வெண்ணிலவே…

BGM


Notes : Vaan Veliyil Song Lyrics in Tamil. This Song from Raja Nee Vaazhga (1986). Song Lyrics penned by K Ravi. வான் வெளியில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top