கடலம்மா கடலம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்நிலாவே வா

Kadalamma Kadalamma Song Lyrics in Tamil


{ குழு : தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா… } * (2)

குழு : தையார தை யார தைய தோம்…
தையார தை யார தைய தோம்…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு…
நாக்கு மட்டும் ஒட்டிவிட்டதே…

பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில்…
இப்ப ரொம்ப இத்துவிட்டதே…

ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்…
நெஞ்சு வேகாது கண்ணம்மா…

பெண் : உன்ன காணாம உயிர் சேராம…
என் கண்ணீரு தீருமா…

ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்…
கடலுக்கு சொந்தமடி…

பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா…
எடுத்துக்க நல்லபடி…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

பெண் : தூதுவிட்ட அலை அட எந்த அலையோ…
என்ன வந்து சேரலையே…

ஆண் : தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்…
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே…

பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம…
நான் நின்னேனே ஊமையா…

ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்…
இந்த கண்ணீரு தேவையா…

பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில…
கரையே மூழ்கிடுமோ…

ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில…
கடலே மூழ்கிடுமோ…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

BGM


Notes : Kadalamma Kadalamma Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. கடலம்மா கடலம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading