வாழ்க்கை ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்மிக்கி ஜே மேயர்இனிது இனிது

Vaazhkai Oru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாழ்க்கை ஒரு வானம் போல…
உறவு அதில் மேகம் போல…
நட்பு மட்டும் சூரியன் போல…
நண்பன் வாழ்க…

ஆண் : பெற்றவர்கள் அறிந்ததை விடவும்…
மற்றவர்கள் தெரிந்ததை விடவும்…
முற்றும் என்னை புரிந்தது நட்பு…
நட்பு வாழ்க…

ஆண் : ஆணும் பெண்ணும் பெண்ணும் ஆணும்…
காக்கும் கற்பு நல்ல நட்பு…

ஆண் : வா தோழா…
ஓ மை பிரண்ட்…
என்னை மனுஷி என்ற…
முதல் மனிதன் நீ…

ஆண் : வா தோழி…
ஓ மை பிரண்ட்…
என்னை மனிதன் என்ற…
முதல் மனுஷி நீ…

—BGM—

ஆண் : மேக கூட்டில் துளிகள் ஆனோம்…
இங்கு வந்து நதிகள் ஆனோம்…
ஒருமை இங்கே பன்மை ஆனோம்…
பன்மை கூடி ஒருமை ஆனோம்…

ஆண் : மின்னல் வந்தால் மேகம் கூட கிழிந்து போகும்…
வானம் என்றும் கிழிதல் இல்லையே…
வானம் போலே எங்கள் நட்பும் வாழ்த்திருக்குமே…

ஆண் : மாலை நிழல் போல் வளரும் பந்தம்…
மயங்கி மயங்கி மகிழும் நெஞ்சம்…

ஆண் : வா தோழா…
ஓ மை பிரண்ட்…
என்னை மனுஷி என்ற…
முதல் மனிதன் நீ…

ஆண் : வா தோழி…
ஓ மை பிரண்ட்…
என்னை மனிதன் என்ற…
முதல் மனுஷி நீ…

—BGM—

ஆண் : நெஞ்சில் வஞ்சம் வன்மம் எல்லாம் மாறிவிட்டதே…
பாறை மனசு பழுத்துவிட்டதே…
பந்த பாசம் புரிந்துவிட்டதே…

ஆண் : வா தோழா…
ஓ மை பிரண்ட்…
என்னை மனுஷி என்ற…
முதல் மனிதன் நீ…

ஆண் : வா தோழி…
ஓ மை பிரண்ட்…
என்னை மனிதன் என்ற…
முதல் மனுஷி நீ…

—BGM—


Notes : Vaazhkai Oru Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. வாழ்க்கை ஒரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading