வாயாடி பெத்த புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி.கே.பிஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் & வைக்கோம் விஜயலட்சுமிதிபு நின்னன் தாமஸ்கனா

Vaayadi Petha Pulla Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஜிங்கு ஜிக்கா கு ஜிங்…
ஜிங்கு ஜிக்கா கு ஜிங்…
ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்…

பெண் : வாயாடி பெத்த புள்ள…
வரப்போறா நெல்லப் போல…
யார் இவ…
யார் இவ…

பெண் : கையில சுத்தற காத்தாடி…
காத்துல ஆடுது கூத்தாடி…
கண்ணுல கலரா கண்ணாடி…
வம்புக்கு வந்து நிப்பா…
யார் இவ…
யார் இவ…

பெண் : ஹான் ஹான்…

ஆண் : யார் இந்த தேவதை…
ஆனந்த பூமக…
வால் மட்டும் இல்லையே…
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி…

ஆண் : யார் இந்த தேவதை…
ஊர் கொஞ்சும் என் மக…
நீ எந்தன் சாமிதான்…
என்ன பெத்த சின்ன தாயே…

—BGM—

குழு : அண்ண கிளியே…
வண்ண குயிலே…
குட்டி குறும்பே கட்டு கரும்பே…

பெண் : ஹான் ஹான்…

குழு : செல்ல கிளியே…
சின்ன சிலையே…
எந்தன் நகலாய் பிறந்தவளா… ஹே…

பெண் : அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே…
ஆசையா வந்தே பொறந்தேனே…
வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே…

—BGM—

பெண் : எனக்கு இருக்கும் கனவு எல்லாமே…
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே…
வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே…

ஆண் : பொட்டப்புள்ள நெனப்புல பசி எனக்கில்ல…
இவ சிரிப்புல மயிலே…
வானவில்லின் கொடைகுள்ள…
வாழ பஞ்சமில்லை…
இடி மின்னல் இவ கூட…
பாட்டு கட்டி ஆடும்…

குழு : யார் இந்த தேவதை…

பெண் : தானனான தன்னான னான…

குழு : வால் மட்டும் இல்லையே…

—BGM—

ஆண் : ஆச மக என்ன செஞ்சாலும்…
அதட்ட கூட ஆச படமாட்டேன்…
என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே…

—BGM—

ஆண் : செவுத்து மேல பந்த போலத்தான்…
சனியையும் சுழட்டி அடிப்பாளே…
காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாலே…

ஆண் : எப்பவுமே செல்ல புள்ள…
விளையாட்டு புள்ள…
ரெட்டை சுழி புள்ள அழகே…

ஆண் : பெத்தவங்க முகத்துல…
ஒரு சிரிப்புல…
ஆச பொண்ணு ஆயுள்தானே…
கூடிக்கிட்டு போகும்…

குழு : வாயாடி பெத்த புள்ள…
வரப்போறா நெல்லப் போல…
யார் இவ…
யார் இவ…

குழு : கையில சுத்தற காத்தாடி…
காத்துல ஆடுது கூத்தாடி…
கண்ணுல கலரா கண்ணாடி…
வம்புக்கு வந்து நிப்பா…
யார் இவ…
யார் இவ…

குழு : யார் இந்த தேவத…
ஆனந்த பூமக…
வால் மட்டும் இல்லையே…

பெண் : சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி…

குழு : யார் இந்த தேவத…
ஊர் கொஞ்சும் என் மக…
நீ எந்தன் சாமிதான்…
என்ன பெத்த சின்ன தாயே…


Notes : Vaayadi Petha Pulla Song Lyrics in Tamil. This Song from Kanaa (2018). Song Lyrics penned by GKB. வாயாடி பெத்த புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading