வாராயோ தோழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசோனு நிகம், ஷாகுல் ஹமீத், ஹரிணி & சங்கீதா ராஜேஷ்வரன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Vaaraayo Thozhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி…

பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி…
அன்னைக்கு மேல் செல்லமடி…
மழலையில் நான் சாய்ந்தபடி…
முதுமையிலும் வேண்டுமடி…

ஆண் : ஏ பாட்டி…
என் ஸ்வீட்டி…
நீ இன்னும் பீயூட்டி… லூட்டியடி …

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓயே…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய் விட்டு சீட்டியடி…

—BGM—

ஆண் : ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ…
லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ…
பொய் பேசும் நரையெல்லாம்…
மைபூசி மாத்திக்கோ… ஓ…

பெண் : அடி ஆத்தி…
என்ன கூத்து…
என் வயசு…
பாதி போச்சு…

ஆண் : கிளின்டன் நம்பர் போட்டு தாரேன்…
கிளு கிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு…

பெண் : யார் நீ என்றால் மிஸ் வோ்ல்ட் அல்ல…
மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு…

ஆண் : ஓயே… வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓ ஹோ ஓ…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய் விட்டு சீட்டியடி…

—BGM—

பெண் : கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு…

ஆண் : எம் டிவி சேனலிலே சஷ்டி கவசம் நீ பாடு… ஹோ…

ஆண் : டூ பீஸ் உட போட்டு…
சன் பாத்து எடு பாட்டி…

ஆண் : டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி…
அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி…
நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு…
வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி… ஓயே…

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓ ஹோ ஓ…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி… யே ஹே யே…

பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி…
அன்னைக்கு மேல் செல்லமடி…
மழலையில் நான் சாய்ந்தபடி…
முதுமையிலும் வேண்டுமடி…

ஆண் : ஓ யே…

பெண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…

ஆண் : ஓ ஹோ ஓ ஓ…

பெண் : வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி… யே ஹே யே…

—BGM—


Notes : Vaaraayo Thozhi Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. வாராயோ தோழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading