columbus-columbus-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Columbus Columbus Song Lyrics in Tamil


ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு… மாமே…

ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு…

ஆண் : லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…
லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…

BGM

ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு…

ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு… மாமே…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு…

ஆண் : லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…
லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…

ஆண் : சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது… ஓ ஹோ…
மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது…

ஆண் : கொல்லும் ராணுவம் அணு ஆயுதம்…
பசி பட்டினி கரி பாலிடிக்ஸ்…
பொலியூஷன் எதும் புகுந்து விடாத…
தீவு வேண்டும் தருவாயா… கொலம்பஸ்…

BGM

ஆண் : வாரம் ஐந்து நாள்…
வியர்வையில் உழைக்க…
வாரம் இரு நாள்…
இயற்கையை ரசிக்க…

ஆண் : வீசும் காற்றாய் மாறி…
மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி…
மீண்டும் பிள்ளையாவோம்…
அலையோடு ஆடி…

ஆண் : பறவையின் சிறகு…
வாடகைக்குக் கிடைத்தால்…
உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு…

ஆண் : பறவைகள் எதற்கும்…
பாஸ்போர்ட் இல்லை…
கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு…

ஆண் : இன்று ஓய்வுதானே வேலை…
ஆனால் ஓய்ந்து போவதில்லை…
இங்கு நிர்வாண மீன்கள் போலே…
நீந்தலாம் கொலம்பஸ்…

BGM

ஆண் : இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு…
இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு…

ஆண் : அலை நுரையை அள்ளி…
அவள் ஆடையைச் செய்யலாகாதா…
விண்மீன்களைக் கிள்ளி…
அதில் கொக்கி வைக்கலாகாதா…

ஆண் : வீக்கென்டில் காதலி…
ஓக்கேன்னா காதலி…
டைம்பாசிங் காதலா…
பிரியும் வரை காதலி …

ஆண் : வாரம் இரு நாள்…
வாழியவே கொலம்பஸ்…

ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு…
கொலம்பஸ்…

ஆண் : லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…
கொலம்பஸ்…

ஆண் : லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…

BGM

ஆண் : கொலம்பஸ்…


Notes : Columbus Columbus Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. கொலம்பஸ் கொலம்பஸ் பாடல் வரிகள்.