அன்புள்ள அப்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே.ஜே.யேசுதாஸ்டி. இமான்சிகரம் தொடு

Anbulla Appa Song Lyrics in Tamil


ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…

—BGM—

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே…
கொடுத்திடுவாய் நீ முதலிலே…
வேண்டாமல் தரும் தெய்வம்…
நீ தானே உண்மையிலே…

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…

—BGM—

ஆண் : மாதக்கணக்கே தாயும் சுமந்து…
வந்தது தான் இவனது உயிரே…
காலம் முழுக்க என்னை சுமந்து…
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே…

ஆண் : தூசி என்னை தொடவும் விட மாட்டாய்…
தோளில் எனை சுமந்து நடை போட்டாய்…
வந்தாயே நீ என் வரமாய்…

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…

—BGM—

ஆண் : தோழன் என நீ…
தோளும் கொடுத்து…
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்…

ஆண் : சோகம் எதையும்…
உன்னுள் மறைத்து…
புன்னகையே எனக்கென தருவாய்…

ஆண் : கண் இமையில் என்னை நீ அடைக்காத்து…
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து…
வாழ்வாயே நீ என் நிழலாய்…

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா…
யாருமே உன்போல் இல்லை மண் மேலே…
அன்புள்ள அப்பா அப்பா…
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே…

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே…
கொடுத்திடுவாய் நீ முதலிலே…
வேண்டாமல் தரும் தெய்வம்…
நீ தானே உண்மையிலே…

—BGM—


Notes : Anbulla Appa Song Lyrics in Tamil. This Song from Sigaram Thodu (2014). Song Lyrics penned by Yugabharathi. அன்புள்ள அப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading