ding-dong-kovil-mani-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜி

Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil


BGM

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

பெண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : சொல்லாத காதல் சொல்ல…
சொல்லாகி வந்தேன்…
நீ பேச இது நீ பேச…

ஆண் : சொல் ஏது இனி நான் பேச…

பெண் : கனவுகளே கனவுகளே…
பகல் இரவு நீள்கிறதே…

ஆண் : இதயத்திலே உன்நினைவு…
இரவுபகல் ஆள்கிறதே…

பெண் : சற்று முன்பு நிலவரம்…
எந்தன் நெஞ்சில் கலவரம்… கலவரம்…

ஆண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும்…
புதுக்காற்றும் தூங்கும்…
தூங்காதே நம் கண்கள்தான்…

பெண் : ஏங்காதே இந்த காதல்தான்…

ஆண் : பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை…
பிடிக்கிறது உன் முகம்தான்…

பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை…
இனிக்கிறது உன் பெயர்தான்…

ஆண் : எழுதி வைத்த சித்திரம்…
எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம்…

பெண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

ஆண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

ஆண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

BGM


Notes : Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Pa Vijay. டிங் டாங் கோவில் மணி பாடல் வரிகள்.