வானமே கானமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்டி. இமான்Teenz

Vaaname Kaaname Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானமே கானமே யாவுமே மாயமே…
வானமே கானமே யாவுமே மாயமே…

ஆண் : நட்பையா நம்பிக்கையா இவர்கள் தொலைத்தது…
நாளையே கேள்விக்குறி ஆகிவிட்டது…

ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால்…
பயணங்கள் யாவுமே பயமேயானால்…

ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன்…
செத்து தொலையாலமே…
அட செத்து என்ன பயன்…
வாழ்ந்தே தொலையலாமே…

ஆண் : வானமே கானமே யாவுமே மாயமே…
வானமே கானமே யாவுமே மாயமே…

—BGM—

ஆண் : வா பிற வா இற வா…
யார் இறவா பிறவி…
பகலும் முடிய இரவும் விடிய…
விடிதல் முடியத்தான்…

ஆண் : மாரடைப்பால் மரணம்…
யார் அழைப்பார் துயரம்…
அழவென சிலர் எழுவென சிலர்…
உடலை சுமக்கத்தான்…

ஆண் : நீ இறந்திடுடா புதைந்திடுடா…
பிறந்து மீண்டும் வா…
ஊர் அழுதிட வா அமுதிட வா…
பிறர்க்குதவி செய் வா…

ஆண் : அனாதையென யாரும் இல்லையே…
இன்னொரு மனிதன் இருக்க…
அனாதையென யாரும் இல்லையே…
இன்னொரு மனிதன் இருக்கும் வரையில்…

ஆண் : வானமே கானமே யாவுமே மாயமே…
வானமே கானமே யாவுமே மாயமே…

ஆண் : நட்பையா நம்பிக்கையா இவர்கள் தொலைத்தது…
நாளையே கேள்விக்குறி ஆகிவிட்டது…

ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால்…
பயணங்கள் யாவுமே பயமேயானால்…

ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன்…
செத்து தொலையாலமே…
அட செத்து என்ன பயன்…
வாழ்ந்தே தொலையலாமே…


Notes : Vaaname Kaaname Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. வானமே கானமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading