வாடி மச்சினியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிசீர்காழி சிவசிதம்பரம் & மாலதி லட்சுமண்வித்யாசாகர்பார்த்திபன் கனவு

Vaadi Machiniyae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடி மச்சினியே…
ஒரசிட தேடி மச்சினியே…
குனிஞ்சா நிமிந்தா…
மனம் தீ புடிக்குது தீ புடிக்குது…
அணைச்சி கொள்ளடியோ…

பெண் : சீனி சக்கரையே…
சிரிப்புல சேதி வைக்கிறியே…
அசந்தா அசந்தா மனம்…
பூத்திருக்குது பூத்திருக்குது…
பறிச்சு கொள்ளுவியே…

—BGM—

ஆண் : முத்து முத்தா பெஞ்ச மழை…
தன்னே நன்னானே…
அந்த மூங்கிலுல தொங்குதடி…
தன்னே நன்னானே…

—BGM—

பெண் : முதுகளை பறிச்சு தாடா…
தன்னே நன்னானே…
நான் மூக்குத்திய போட்டுக்குவேன்…
தன்னே நன்னானே…

—BGM—

ஆண் : வெளி வரும் நேரத்துல…
தன்னே நன்னானே…
நீ வேட்டி கட்டி வந்துடடி…
தன்னே நன்னானே…

பெண் : வேட்டி கட்டி வந்துடலாம்…
தன்னே நன்னானே…
இந்த வெறும்பய வேடிக்க பான்…
தன்னே நன்னானே…

ஆண் : ஏணி வச்சு…
என் உசுர எட்டி பார்க்காதே…
என் மீசை முள்ளில் சிக்கிகிச்சு…
பட்டு பாவாடை…

பெண் : சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
மாவிடிச்ச புட்டு…
மாமனுக்கு கொட்டு…

பெண் : மந்த காளை சந்தை போய்…
மத்தாளத்த தட்டு…
சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
சோ சிட்டு…
சோள சோள சிட்டு…

—BGM—

ஆண் : குச்சனூரு கம்மாயில…
தன்னே நன்னானே…
நீ குளிக்கயில பார்த்திடுவேன்…
தன்னே நன்னானே…

—BGM—

பெண் : நான் குளிக்கயில பார்த்துபுட்ட…
தன்னே நன்னானே…
நீ கோயில் கட்டி கும்பிடுவ…
தன்னே நன்னானே…

ஆண் : மொச்சபல்லு காவலுக்கு…
தன்னே நன்னானே…
நீ பச்சை சேலை கட்டி வாடி…
தன்னே நன்னானே…

பெண் : அய்யோ… மொச்சகாய் வெடிக்கும் முன்னே…
தன்னே நன்னானே…
என்னை மிச்சம் மீதி வைக்க மாட்ட…
தன்னே நன்னானே…

ஆண் : ஏ… கிடுக்கி போட்டு என் வயச…
துடிக்க வைக்காதே…
என்னை தடுக்கிவிட்டு ஊரு சனம்…
சிரிக்க வைக்காதே…

பெண் : சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
மாவிடிச்ச புட்டு…
மாமனுக்கு கொட்டு…

பெண் : மந்த காளை சந்தை போய்…
மத்தாளத்த தட்டு…
சோ சோ சோ…
சோ சோ சோ…

—BGM—

ஆண் : பூவரசன் காட்டுகுள்ளே…
தன்னே நன்னானே…
நீ புல்லறுக்க வந்திடடி…
தன்னே நன்னானே…

பெண் : ஹேய்… புல்லறுக்க வந்தேனுனா…
தன்னே நன்னானே…
நீ புல்லரிக்க வச்சிடுவ…
தன்னே நன்னானே…

ஆண் : ஆட்டுகடை பக்கத்திலே…
தன்னே நன்னானே…
நம்ம புது கடை போட்டுகலாம்…
தன்னே நன்னானே…

பெண் : ஆட்டுகெல்லாம் தூக்கம் கெட்டு…
தன்னே நன்னானே…
ஊரை கூட்டி போடும் கூச்சலிட்டு…
தன்னே நன்னானே…

ஆண் : ஏ… பனை ஏறி கெண்ட போல…
பாக்குது கண்ணு…
சூர காத்தா சுத்தி…
சுத்தி தாக்குது பொண்ணு…

பெண் : சோ சிட்டு…
சோள சோள சிட்டு…
மாவிடிச்ச புட்டு…
மாமனுக்கு கொட்டு…

பெண் : மந்த காளை சந்தை போய்…
மத்தாளத்த தட்டு…
சோ சோள சோள…
சோ சோள சோள…
சோ சோள சோள…
சோ சோள சோள…


Notes : Vaadi Machiniyae Song Lyrics in Tamil. This Song from Parthiban Kanavu (2003). Song Lyrics penned by Arivumathi. வாடி மச்சினியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading