வாஜி வாஜி சிவாஜி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Vaaji Vaaji Sivaji Song Lyrics in Tamil


குழு : ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…
ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…

ஆண் : பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்…
புன்னகையோ மவ்வல் மவ்வல்…

ஆண் : உன் பூவிழிப் பார்வை போதுமடி…
என் பூங்கா இலைகளும் மலருமடி…
உன் கால்கொலுசொலிகள் போதுமடி…
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அன்பா வாளை எடு…
அழகை சாணையிடு…
உன்ஆண் வாசனை…
என் மேனியில் நீ பூசிவிடு…

ஆண் : அடி நெட்டை நிலவே…
ரெட்டைத் திமிரே…
நெஞ்சில் முட்டிக் கொல்லு…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : பூம்பாவாய்…
குழு : ஆம்பல் ஆம்பல்…
ஆண் : புன்னகையோ…
குழு : மவ்வல் மவ்வல்…

BGM

ஆண் : ஒரு வெண்ணிலவை…
மணக்கும் மன்மதன் நான்…
என் தேன்நிலவே…
ஒரு நிலவுடன்தான்…
அவள் யாருமில்லை…
இதோ இதோ இவள்தான்…

பெண் : புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
ஆஆஹா… புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா…
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா…

ஆண் : ஓ… பெண்களிடம் சொல்வது குறைவு…
செய்வது அதிகம்…
செயல்புயல் நானடி…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : பூம்பாவாய்…
குழு : ஆம்பல் ஆம்பல்…
ஆண் : புன்னகையோ…
குழு : மவ்வல் மவ்வல்…

BGM

ஆண் : பொன் வாக்கியமே… வாய் வாத்தியமே…
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்…
வந்து ஒளிந்து கொண்டேன்…
சுகம் சுகம் கண்டேன்…

பெண் : ஆனந்த வெறியில் நான்…
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்…
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி…
வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன்…

ஆண் : அடடா குமரியின் வளங்கள்…
குழந்தையின் சிணுங்கல்…
முரண்பாட்டு மூட்டை நீ…

பெண் : வாஜி வா வா வா…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : ஓ… பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்…
புன்னகையோ மவ்வல் மவ்வல்…

ஆண் : உன் பூவிழிப் பார்வை போதுமடி…
என் பூங்கா இலைகளும் மலருமடி…
உன் கால்கொலுசொலிகள் போதுமடி…
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி…

குழு : ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…
ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…


Notes : Vaaji Vaaji Sivaji Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Vairamuthu. வாஜி வாஜி சிவாஜி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading