வா வா கண்மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇன்னிசை மழை

Vaa Vaa Kanmani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா வா கண்மணி… வா வா கண்மணி…
வா வா கண்மணி வாசல் தேடி வா…
வா வா கண்மணி வாசல் தேடி வா…
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…
வா வா மன்னவா வாசல் தேடி வா…
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…

ஆண் : வா வா கண்மணி…

—BGM—

பெண் : தொடங்கியது இசை மழை இங்கே…
தொடர்ந்து வந்த பகைவர்கள் எங்கே…
முழங்குவது சுதந்திர கீதம்…
வழங்குவது சுகம் தரும் நாதம்…

ஆண் : சுதிகளின் ஒலியை யார் சிறைகளில் அடைப்பது…
பெண் : சுரங்களை யார் அவன் கரங்களில் பிடிப்பது…

ஆண் : இசையின் வழி இதயங்கள் கூட…
இடையில் சில தடைகளை போட…
கடந்து வரும் கலைஞனின் பாட்டு…
தடுப்பதெவர் விலங்குகள் போட்டு…

பெண் : ஆயிரம் ரசிகர்கள் யாவரும் நம் வசம்…

ஆண் : ஆனந்த கீதத்தில் தோன்றிடும் பரவசம்…
வாவா வாவா அன்பே…

பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…
ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா…

—BGM—

ஆண் : இருவர் நெஞ்சில் பல வகை காயம்…
இசையில் அவை மறைந்திடும் மாயம்…
இரண்டு குயில் இணைந்திடும் நாளும்…
இரவு பகல் இசைத்திடும் கானம்…

பெண் : தேவனின் தீர்ப்பிது யார் இதை மறுப்பது…
ஆண் : காதல்தான் என்றுமே கடைசியில் ஜெயிப்பது…

பெண் : உனது நிழல் எனக்கில்லை என்று…
உயிரை விட நினைத்தது உண்டு…
உனது துணை கிடைத்தது இங்கு…
உயிரை விட உயர்ந்தது என்று…

ஆண் : ராகமும் தாளமும் ஓர் வகை மூலிகை…
சோகங்கள் தீர்ந்தன பூத்தது பூ நகை…
வாவா வாவா அன்பே…

—BGM—

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா…
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…

—BGM—

ஆண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…
பெண் : வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா…

ஆண் : வா வா கண்மணி வாசல் தேடி வா…
பெண் : வா வா மன்னவா வாசல் தேடி வா…


Notes : Vaa Vaa Kanmani Song Lyrics in Tamil. This Song from Innisai Mazhai (1992). Song Lyrics penned by Vaali. வா வா கண்மணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading