அடி நேற்றிரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇன்னிசை மழை

Adi Netriravu Song Lyrics in Tamil

BGM

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…

பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

BGM

ஆண் : பத்து விரல் பட்டால் என்ன…
முத்த மழை இட்டால் என்ன…
பெண் : ஆஹா ஆஹா ஆஹா… பொன்னே மணியே…

ஆண் : பட்டு உடல் சுட்டால் என்ன…
வெட்கம் அதை விட்டால் என்ன…
பெண் : ஆஹா ஆஹா ஆஹா… அன்பே அமுதே…

ஆண் : கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்…
பெண் : மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்…

ஆண் : ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும்…
கூடி வரும் நாள் இது நேற்றிரவு…

ஆண் : நேற்றிரவு… அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…

பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

BGM

பெண் : அந்தப்புர சந்தோஷங்கள்…
அர்த்த ஜாம சங்கீதங்கள்…
ஆண் : ஆஹா ஓஹோ ஏஹே… உன்னால் வந்ததே…

பெண் : தென்பொதிகைச் சாரல் என…
சின்ன மணித் தூரல் என…
ஆண் : ம்ஹும் ஆஹா ஓஹோ… இன்பம் தந்ததே…

பெண் : முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்…
ஆண் : முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்…

பெண் : இனி முதுமை வரையில் நமது உறவு…
ஓடி வரக் கூடுமே…

ஆண் : நேற்றிரவு… அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

ஆண் : தித்தித்தது நெஞ்சம்…
பெண் : சம்சம் சம்…
ஆண் : தென்பட்டது கொஞ்சம்…
பெண் : சம்சம் சம்…

பெண் : உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே…
சொல்லியது பத்தாதோ…

ஆண் : அடி நேற்றிரவு நடந்ததென்ன… ஆஹ ஹஹா ஹா…
பெண் : இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…

Notes : Adi Netriravu Song Lyrics in Tamil. This Song from Innisai Mazhai (1992). Song Lyrics penned by Vaali. அடி நேற்றிரவு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading