காலை நேர ராகமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ராஇளையராஜாராசாவே உன்னெ நம்பி

Kaalai Nera Raagame Song Lyrics in Tamil


BGM

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கட்டிலிலே சொல்லி தந்த ராகங்களை…
காலையிலே எண்ணி கொள்ள ஆனந்தமே…
மெத்தையிலே போட்ட விதை…
தொட்டிலிலே பூத்து வரும்…

பெண் : இஷ்ட பட்டு கேட்ட கதை…
இன்பங்களை சேர்த்து வரும்…
அன்பு மனம் ஒன்றை ஒன்று கொண்டாடும்…
அந்த சுகம் வந்து நின்றதே…
இன்று முதல் என்னுலகில் சந்தோசம்…
இன்னிசையை பாடுகின்றதே…

BGM

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

BGM

பெண் : அன்பு என்னும் சின்ன சின்ன நூல் எடுத்து…
துன்பங்களை எண்ணி எண்ணி கோர்த்து வைத்தேன்…

பெண் : போட்டு வைத்தேன் கோலம் ஒன்று…
உன் மனதில் நானும் இன்று…
கேட்கும் வரம் இன்று ஒன்று…
காலமெல்லாம் நாமும் ஒன்று…

பெண் : பாசத்துக்கு இன்றுமுதல் வெள்ளோட்டம்…
பந்தமென்னும் பாதை தன்னிலே…
நேசம் அதில் அன்பு என்னும் முன்னோட்டம்…
நித்தம் வந்து ஒட்டி கொண்டதே…

BGM

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…

பெண் : புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…

பெண் : காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…


Notes : Kaalai Nera Raagame Song Lyrics in Tamil. This Song from Raasave Unnai Nambi (1988). Song Lyrics penned by Gangai Amaran. காலை நேர ராகமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading