உன்னை ஒன்று கேட்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்புதிய பறவை

Unnai Ondru Song Lyrics in Tamil


பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

BGM

பெண் : காதல் பாட்டு பாட…
காலம் இன்னும் இல்லை…
காதல் பாட்டு பாட…
காலம் இன்னும் இல்லை…
தாலாட்டு பாட தாயாகவில்லை…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

BGM

பெண் : நிலவில்லா வானம்…
நீரில்லா மேகம்…
பேசாத பெண்மை…
பாடாது உண்மை…

பெண் : கண்ணை மெல்ல மூடும்…
தன்னை எண்ணி வாடும்…
பெண்ணை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

BGM

பெண் : தனிமையில் கானம்…
சபையிலே மவுனம்…
உறவுதான் ராகம்…
உயிரெல்லாம் பாசம்…

பெண் : அன்பு கொண்ட நெஞ்சில்…
அனுபவம் இல்லை…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…

பெண் : உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…


Notes : Unnai Ondru Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. உன்னை ஒன்று கேட்பேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading