உனக்கும் எனக்கும் ஆனந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாஸ்ரீ ராகவேந்திரர்

Unakkum Enakkum Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…
படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…

பெண் : பாலாடைதான் ஆடுதோ…
ஓர் நூலாடைதான் மூடுதோ…
வா நெருங்க நெருங்க ஏன் வெட்கம்…
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்…

பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…
படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…

BGM

பெண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க…
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க…

ஆண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க…
அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க…

பெண் : பெண் பாவை கண்டானது காமபாணமே…
எங்கேயும் உண்டாகும் சோமபானமே…
ஆண் : ஆஹாஹ்…

பெண் : உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்…
என் அழகு வடியும் கன்னம்…

ஆண் : என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம்…
உன் அழகு வடியும் கன்னம்…

பெண் : பூமேனி பொன்மேனி…
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி…

பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…

ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…

BGM

பெண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு…
ஆவோ ஆவோ தினசரி இரவு…

ஆண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு…
ஆவோ ஆவோ தினசரி இரவு…

பெண் : தாளாது தாங்காது ஜோடி தேடுது…
தில்ரூபா தில்லானா பாடி ஆடுது…

பெண் : நீ எடுக்க எடுக்க தீராது…
உன் புதையல் இருக்கு இங்கே…
இரவும் பகலும் மூடாது…
பொன் சுரங்கம் இருக்கு இங்கே…

ஆண் : பூமேனி பொன்மேனி…
இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி…

பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…

ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…

பெண் : பாலாடைதான் ஆடுதோ…
ஓர் நூலாடைதான் மூடுதோ…
வா நெருங்க நெருங்க ஏன் வெட்கம்…
நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம்…

பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…
படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…


Notes : Unakkum Enakkum Song Lyrics in Tamil. This Song from Sri Raghavendrar (1985). Song Lyrics penned by Vaali. உனக்கும் எனக்கும் ஆனந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top