துளி ஈரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஹரிஷ் சிவராமகிருஷ்ணன்ஜி. வி. பிரகாஷ் குமார்அநீதி

Thuli Eeram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : துளி ஈரம் சுரக்காத வாழ்வில்…
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்…
ஒரு நீதி தலையேறி ஆடும்…
அநீதி…

—BGM—

ஆண் : மதயானை அரசாளும் காட்டில்…
தனக்கான இடம் தேடும் ஈசல்…
கிடைக்காமல் அலை மோதும் சோகம்…
அநீதி…

ஆண் : யார் நீதி மேலோ…
யார் நீதி கீழோ…

ஆண் : பணம் காசின் கையோங்கும் போது…
பசி யாவும் வாழேந்தும் போது…
முரண்பாட்டின் மலராக பூக்கும்…
அநீதி… அநீதி…

—BGM—

ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ…
மீதிதான் யாதோ…

ஆண் : பூவின் காம்பே சீழ் என்றால்…
வாசம்தான் கனவோ…
விண்மீனோ கண்ணீரோ…
மீதிதான் எதுவோ…

ஆண் : மானுடம் என்பதே…
மாபெரும் தோல்வியோ…
எளியவர் வாழும் வாழ்வோ…
அநீதி…

ஆண் : மீன்களின் தேவையோ…
தூண்டிலின் ஆசையோ…
உயிர் வாழ்தலின் கூத்திலே…
யாவுமே கேள்வியோ…

—BGM—

ஆண் : கானல் நீரோ சிறு ஊற்றோ…
மீதிதான் யாதோ…


Notes : Thuli Eeram Song Lyrics in Tamil. This Song from Aneethi (2023). Song Lyrics penned by Karthik Netha. துளி ஈரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading