துளசிச்செடிய அரளிப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & தீபா மரியம்ஜி.வி.பிரகாஷ் குமார்சேவல்

Thulasi Chediya Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…
துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

பெண் : ஓ… பட்டப்பகல் வெட்ட வெயில்…
நம்மை இப்ப சேர்க்கனும்…
நாலு நாளா ஒன் நெனப்பில்…
நானும் ரொம்ப வேர்க்கணும்…

ஆண் : என் உசுரே நீ உதிராம நான் புடிப்பேன்…
நெல்லுக்கதிரே நீ கருகாம வாழவைப்பேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா…
ஒன் நெனப்பே என் கண்ணால குத்துதடா…
குத்துதடா குத்துதடா…

BGM

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM

ஆண் : ஓஓஹோ… வேப்பங்குச்சா இருந்த என்ன…
வெட்டிவேரா மாத்துன…
சேவலப்போல் திரிஞ்ச என்ன…
ஊர்க்கோழியா ஆக்குன…

ஆண் : கட்டுத்தரி காளைப்போல காலம் பூரா சுத்துனேன்…
வீட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்…

பெண் : ஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே…
மொத்தமாத்தான் என் நெனப்ப மூடிவச்சு நின்னியே…

ஆண் : சொடலைமட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்…
ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு தள்ளுனேன்…

பெண் : என் வயசு ஒன்னப்பாக்காம கொறைஞ்சிறுமே…
என் உசுரு நீ இல்லன்னா மறைஞ்சிறுமே…
மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே…

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM

பெண் : பாரிஜாத பூவ நீயும் பார்வையால தாக்குன…
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன…
கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன…
ஒன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாதான் மாத்துன…

ஆண் : முக்குளத்துத் தோட்டத்துல நான் பறிச்சேன் முல்லைதான்…
நீ மூனு மையில் தாண்டிப்புட்டா எம்மனசு தொல்லதான்…

பெண் : சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்…
சாயங்கால நேரம் வந்தா ஒன்னுடைய ஞாபகம்…

ஆண் : என் உயிரே உன்ன ஒரு நாளும் மறக்கலையே…
இளம்பயிரே உன்ன ஒருநாளும் வெறுக்கலையே…
வெறுக்கலையே வெறுக்கலையே…

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM


Notes : Thulasi Chediya Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Hari. துளசிச்செடிய அரளிப்பூவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading