துடிக்கின்ற காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுபமா, மனோ & பவதாரணிதேவாநேருக்கு நேர்

Thudikindra Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

—BGM—

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

—BGM—

ஆண் : இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்…
எவர் கண்டார்… எவர் கண்டார்…

பெண் : என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

—BGM—

ஆண் : மாலை வந்து சேருமுன்னே…
பிள்ளை வரலாம் எவர் கண்டார்…

பெண் : அத்து மீற நினைக்காதே…
குத்தி விடுவேன் எவர் கண்டார்…

—BGM—

பெண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

—BGM—

பெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

ஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்…
எவர் கண்டார் அதை எவர் கண்டார்…

—BGM—

பெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்…
முட்டி விடுவேன் எவர் கண்டார்…

ஆண் : உன்னைவிட நான் காதல் செய்து…
உன்னை வெல்வேன் எவர் கண்டார்…

பெண் : மனமே திகைக்காதே…

ஆண் : துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது…
எப்பவும் வரலாம் எவர் கண்டார்…

பெண் : இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்…
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்…

ஆண் : மனமே திகைக்காதே…

பெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை…
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்…

—BGM—

ஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை…
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்…

—BGM—


Notes : Thudikindra Kadhal Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. துடிக்கின்ற காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading